ஆடுகளுக்கு ஏற்ற தீவன ஊட்டத்தை கொடுப்பது ஒரு கலை. வாசிச்சு நீங்களும் தெரிஞ்சுக்குங்க...

 
Published : Nov 17, 2017, 01:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
ஆடுகளுக்கு ஏற்ற தீவன ஊட்டத்தை கொடுப்பது ஒரு கலை. வாசிச்சு நீங்களும் தெரிஞ்சுக்குங்க...

சுருக்கம்

Feeding the feeding of the sheep is an art. Know how to read

தீவன ஊட்டம்

ஆடுகள் தனிப்பட்ட தீவன ஊடடத்தையே விரும்புபவை. ஆடுகளுக்குக் கோடுக்கும் தீவனங்கள் அடிக்கடி மாற்றப்பட்ட, சுத்தமான, புதியவையாக இருத்தல் வேண்டும். ஏதேனும் கெட்ட துர்நாற்றத்துடனோ, அழுக்கு மண் கலந்தோ இருந்தால் அல்லது மரக்கிளை, சுவர், நட்டு வைத்த குச்சி போன்ற ஏதேனும் ஒன்றில் கட்டித் தொங்கவிடலாம். இவ்வாறு வைப்பதன் மூலம், புற்கள் அல்லது தழைகள் கீழே விழுந்து வீணாகாமல் இருக்கும். 

மேலும், அவ்வப்போது சிறிது சிறிதாக ஆடுகளுக்குத் தீவனமளிக்கலாம். அதிக அளவில் ஒரே நேரத்தில் கொடுக்கும் போது பாதித் தீவனம் ஆடுகளின் காலில் மிதிபட்டு வீணாகிறது. ஆடுகளும் அசை போட்டு உண்ணக்கூடியவை. இவை பயறு வகைத் தாவரங்களை அதிகம் விரும்பி உண்கின்றன. இவை சோளம், கம்புச் சோளம், பதப்படுத்தப்பட்ட தீவனங்கள், வைக்கோல் போன்றவற்றை விரும்பவதில்லை. 

இவை காட்டுப்புற்களை அதிகம் உண்பதில்லை. ஆனால் குதிரை மசால், துவரை, நேப்பியர் புல், தர்ப்பைப்புல், சோயாபீன், முட்டைக்கோஸ், காளிஃபிளவர் போன்றவற்றின் இலை தழைகளையும் செஞ்சி மற்றும் சில பூண்டுகளையும் நன்கு உண்கின்றன. இவைத் தவிர புளியமரம், வேம்பு, இலந்தை போன்றவற்றின் தழைகளையும் முங்பீன் போன்ற பயிறுகளையும் உண்ணும் இயல்புடையவை.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?