ஆடுகளின் கொம்பை நீக்குதல், காயடித்தல் போன்றவற்றால் ஏற்படும் நன்மைகள்...

Asianet News Tamil  
Published : Nov 18, 2017, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
ஆடுகளின் கொம்பை நீக்குதல், காயடித்தல் போன்றவற்றால் ஏற்படும் நன்மைகள்...

சுருக்கம்

Benefits of removal of the horns of the goats...

ஆடுகளுக்கு கொம்பு நீக்கம் செய்தல்

கொம்பு நீக்கம் செய்வதால் ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் காயப்படுத்திக் கொள்வதைத் தடுக்க இயலும்.

கொம்பு உடைதல், கொம்புகளினால் ஏற்படும் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்க இயலும்.

கிடாக்குட்டிகள் பிறந்து 2-5 நாட்களுக்குள்ளும், பெட்டைக்குட்டிகளுக்கு 12 நாட்களுக்குள்ளும் கொம்பு நீக்கம் செய்தல் வேண்டும்.

நீக்கம் செய்யப்படவேண்டிய பகுதியைச் சுற்றியு்ள முடிகளை நீக்கிவிட்டு பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவவேண்டும்.

காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஷ் கொண்டு கொம்பு வளரும் பகுதி புண்ணாகும் வரை நன்கு தேய்க்கவேண்டும்.

எக்காரணம் கொண்டும் காஸ்டிக் சோடா அல்லது பொட்டாஸ் கண்களில் படக்கூடாது. மின்சார கொம்பு நீக்கியைப் பயன்படுத்துதல் சிறந்தது.

குட்டியின் வாயை அடைக்கும் போது, அது மூச்சு விட ஏற்றவாறு அடைக்கவேண்டும். அல்லது மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

வயது முதிர்ந்த ஆடுகளில் செய்யும் போது வளர்ந்து விட்ட கொம்புகளை இரம்பம் கொண்டு அறுத்துவிடவேண்டும்.

இவ்வாறு செய்யும் போதே ஈக்கள் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

ஆடுகளுக்கு காயடித்தல்

இனப்பெருக்கத்திற்குத் தேவையில்லாத கிடாக்களை காயடித்து விடலாம்.

கிடாக்களை காயடிக்கும் சரியான வயது 4-6 மாதங்கள் ஆகும். பர்டிஸோ கருவி என்ற கருவி மூலம் காயடித்தால் நோய்த் தொற்று அபாயங்கள் குறையும்.

பயன்கள்

1. இறைச்சியின் சுவை அதிகமாக இருக்கும்.

2. உடல் எடை விரைவாக அதிகரிக்கும்.

3. ஆட்டுத் தோலின் தரம் உயர் மதிப்புக் கொண்டதாக இருக்கும்.

4. அமைதியாக இருக்கும்.

 

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!