மரம் வளர்ப்பது என்பதை கேட்டவுடன் ஏதோ ஓசோன் படலம் ஓட்டை விழாமல் தடுக்கவும், மாதம் மும்மாரி பொழியவும் இவர்களை எல்லோரும் மரம் வளர்க்க சொல்வதாக நம் மக்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
மரம் வளர்ப்பில் இருக்கும் உண்மையான லாபத்தை பற்றி தெரிந்தால் தரிசு நிலங்களை நம் நாட்டில் பார்ப்பது என்பதே அரிது ஆகிவடும்.
இதை பற்றி பெரிதாக தெரிந்துகொள்ள ஒன்றும் இல்லை.உதாரணமாக ஒருவர் 5 ஏக்கர் நிலம் வைத்து இருக்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள்.சுத்தமாக தண்ணீர் கிடையாது வானம் பார்த்த பூமி, முழுவதும் மழையை நம்பி தான் விவசாயம் பார்க்க முடியும் என்ற நிலையில், அவர் ஏக்கருக்கு 400 மரங்கள் விதம சுமார் 2000 பெரு மரம் ( பிய மரம் (அ ) பியன் மரம் ) கன்றுகளை மழை காலத்தில் நட்டு பராமரித்து வந்தால் ,அவர் அடையும் லாபம் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் பெரும் சம்பளத்துக்கு ஈடானது.
பிய மரம் என்பது வறட்சி நிலங்களுக்கு மிக உகந்தது.கடும் வறட்சியையும் தாங்ககுடியது. மிக வேகமாக வளரகூடியது, குறைந்த பட்ச நீர்வளம் இதற்கு போதுமானது,மழையை மட்டுமே நம்பி கூட இதை நட்டு வளர்க்கலாம்.
4 வருடங்கள் வளந்த ஒரு மரமானது ,மிக குறைந்த பட்சம் ஒரு 1000 ரூபாய்க்கு போனால் கூட 5 ஏக்கர் மரம் நட்ட ஒருவர் சுமார் 20 லட்சம் ருபாய் பெற முடியும். மழையை மட்டும் நம்பி இருக்காமல் மாதம் சுமார் 2000 அல்லது 3000 செலவு செய்து ,காசு கொடுத்து தண்ணீர் வாங்கி ஊற்றினால் கூட நட்டம் ஒன்றும் இல்லை..இது போல சந்தன , அகர் ,மழை வேம்பு போன்ற மரங்களை ,மண்ணின் தரத்திக்கு ஏற்ப பயிர் செய்து ,பலம் பெறலாம்.
இப்பொழுது வனதுறையினர் அனைத்து ஊர்களிலும் நல்ல தரமான பியன் மற்றும் பிற வகை மர நாற்றுகளையும் இலவசமாக வழங்கி வருகிறார்கள், உங்கள் ஊர் அருகாமையில் உள்ள வனதுறையினரின் தொடர்பு எண் பெற இந்த கை பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் 9994347739 (சிவலிங்கம்) ..
எனவே மழை இல்லை, விளைச்சல் இல்லை என்று புலம்பிக்கொண்டு ,தோட்டம் காடு எல்லாம் விற்றுவிட்டு வேறு தொழில் செய்யலாம் என்று விவசாயிகள் எண்ணாமல் ,இது போல லாபம் தரும் முறைகளை பின்பற்றி பயன் பெறலாமே..
இனி வரும் காலம் உழவர் காலம் ,நம்மை நம்பியே உலகம்..