பயறுவகை பயிர்களுக்கு இலைவழி உரம்:
உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்ற பயறுவகை பயிர்கள் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பயறுவகை பயிர்களில் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று அதிக வருமானம் பெற்றிட இலைவழி உரமாக டி.ஏ.பி. 2 சதவீத கரைசலும் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் உற்பத்தியாகும் பயறு வகைகளைத் தெளித்து பயனடையலாம்.
எப்படி தெளிப்பது?
1.. டி.ஏ.பி. 2 சதவீத கரைசல் தெளிக்க ஒரு ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை முதல்நாள் காலை ஊறவைத்து, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குச்சி கொண்டு கலக்கி விடவும்.
2.. பின்பு மறுநாள் தெளிந்த நீரை 200 லிட்டர் நீரில் கலந்து செடி முழுவதும் நனையும் படியும் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.
3.. அதாவது இதேபோல் பூக்கும் போது ஒரு தடவையும், 15 நாள் கழித்து ஒருமுறையும் தெளிக்க வேண்டும்.
4.. அல்லது தமிழ்நாடு வேளாண் மை பல்கலைகழக பயறு ஒண்டர் 5 கிலோ ஒரு எக்டர் பயறு செடிகளுக்கு 500 லிட்டர் தண்ணீரில் கரைத்து பூப்பூக்கும் தருணத்தில் தெளிக்கலாம்.