விவசாயிகள் கூடுதல் லாபம் பெற சாமந்தி பூவை பயிரிடலாம்.
ரகம்:
ஏரோடில் ரக சாமந்தி பூ (மேரி கோல்டு)
பருவம்:
டிசம்பர், ஜனவரி மாதங்கள்
நடவு:
குழித்தட்டு முறையில் நாற்றங்கால் அமைத்து, 15 முதல் 18 நாள்களில் சொட்டுநீர்ப் பாசனம் மூலம் 5 அடி இடைவெளியில் இரு வரிசைகளாக, இரண்டரை அடிக்கு 1 என்ற இடைவெளியில் 20 சென்ட் அளவுக்கு நடவுச் செய்ய வேண்டும்.
உரம்:
ரசாயன உரம் அதிகம் சேர்க்காமல் தொழுஉரம் மற்றும் இயற்கை உரங்களைப் போட வேண்டும்.
பூக்கும் காலம்:
நடவு செய்த 30 நாள்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும். பூக்கள் 2 நாள்களுக்கு ஒருமுறை சராசரியாக 30 கிலோ கிடைக்கும். 1 கிலோ பூவின் விலை ரூ.70-க்கு விற்பனைக்கு எடுப்பர். 25 முறை பூப்பறிக்கலாம்.
3 முறை பூச்சி மருந்து தெளித்து, 2 முறை களையெடுக்க வேண்டும். தேவைக்கேற்ப சொட்டுநீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நீரின் மூலம் மேலுரம் இட வேண்டும்.
வரவு:
100 நாள்களில் 20 சென்ட்டில் ரூ.30 ஆயிரம் கிடைக்கும். சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பூக்களின் விலை அதிகமாக உள்ளதால் நிறைந்த வருமானம் கிடைக்கும்.
20 சென்ட்டுக்கு உழவு மற்றும் தொழு உரத்துக்கு ரூ.1500, விதைக்கு ரூ.2500, தென்னை நார்கழிவு மற்றும் குழித்தட்டுக்கு ரூ.200, நாற்று தயார் செய்வதற்கு ரூ.600, நடவுக்கு ரூ.300, நீர்ப் பாய்ச்ச ரூ.2500, உரத்துக்கு ரூ.500, பூப்பறிக்க ரூ.1000, மருந்து மற்றும் தெளிப்புக்கு ரூ.600, களையெடுக்க ரூ.300 என சுமார் ரூ.10 ஆயிரம் செலவு ஆகும்.
எப்படி பார்த்தாலும் செல்வரை விட வரவு அதிகமே. லாபமும் நல்லாவே இருக்கும்.