பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:
1.. தமிழகத்தில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு பயிரிடப்படும் எல்லா இடத்திலும் கூண்டுப்புழு வண்டு காணப்படுகிறது.
2.. இது சர்க்கரைவள்ளிக் கிழங்கை வயலிலும் சேமிப்புக் கிடங்குகளிலும் தாக்கக்கூடிய ஒரு முக்கியமான பூச்சி.
3.. வண்டுகளின் புழுக்கள் கிழங்குகளைத் துளைத்து, உட்திசுக்களை உண்டு சேதம் விளைவிக்கும்.
4.. தாக்கப்பட்ட கிழங்குகளிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசுவதால் அவை உண்பதற்கோ, சமையல் செய்வதற்கோ பயனற்றது.
5.. புழுக்கள் கொடிகளையும் துளைத்து சேதம் விளைவிக்கக் கூடியவை.
6.. வண்டுகள் இலைகளையும் கொடிகளையும் கிழங்குகளையும் துளைத்து சேதம் விளைவிக்கக் கூடியவை.
பூச்சிக்கட்டுப்பாடு:
1.. வண்டுகளால் தாக்கப்படாத கொடிகளை நடவுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும்.
2.. தாக்கப்பட்ட கொடிகளையும் கிழங்குகளையும் அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும்.
3.. சேமிப்புக் கிடங்குகளில் கிழங்குகளைப் பரப்பிவைத்து, அதன் மேல் சுமார் 2.5 செ.மீ. உயரத்திற்கு மணலைப் பரப்பி மூடி வைப்பதன் மூலம் பூச்சி தாக்காமல் பாதுகாக்கலாம்.
4.. பயிர் இரண்டு மாத கால வயது இருக்கும்போது கார்பரில் 0.1 சத கலவையை 3 வாரத்திற்கு ஒரு முறை மேலும் இரண்டு தடவை தெளிக்க வேண்டும்.