அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் ஒரு காய் அதலைக் காய். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியான கலிங்கபட்டி, வண்ணிமடை, போத்திரெட்டிபட்டி, ஓடைப்பட்டி, கொல்லபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கரிசல்காட்டு பகுதியில் அதலைச் செடிகள் ஏராளமாக முளைக்கும்.
இந்த செடிகளில் அதிக அளவில் அதலைக்காய்கள் விளைந்துள்ளன.
இந்த அதலைக்காய் சர்க்கரை நோய், மஞ்சள்காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு நல்ல நிவாரணி.
இந்தப் பகுதியில் விளையும் அதலைக் காய்க்கு சுற்று வட்டார பகுதிகளில் தனி மவுசு உண்டு.
இங்கு விளையும் அதலைக்காய்கள் திருச்சி, மதுரை, தேனி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. பொதுவாக இக்காயினை உடனடியாக சமைத்துவிட வேண்டும், இல்லாவிட்டால் தன்மையும் ருசியும் மாறி அது தானகவே முளைக்கத் துவங்கிவிடும். அப்படிப்பட்ட அதிசய காய் இது.
இதை தனியாக விவசாயம் செய்ய முடியாது. தானாகவே காட்டில் வளரும் தன்மை கொண்டது.
அதலைக்காய், பாகற்காய்க்கு இணையான மருத்துவ குணம் கொண்டது. கசப்பு தன்மை இருந்தாலும் ருசி மிகுந்தது இந்த அதலைக் காய்.