தமிழகத்தில் ரூ.100-க்கும் குறையாமல் விற்பனையாகும் ஒரே பழம் மாதுளைதான்.
மாதுளையில் இரண்டு ரகங்கள் பிரபலம். அவை கணேஷ், பகவா.
undefined
இதில் கணேஷ் நமது நாட்டு மாதுளையைப் போல் உள்ளே கடினமான விதையடன் முத்துக்கள் வெள்ளை நிறத்துடன் இருக்கும்.
பகவா’ சுத்த சிவப்பு நிறத்தில் மெல்லிய விதையுடனும் இருக்கும். ருசி, நிறம் காரணமாக பகவா குறைந்தபட்ச விலையே ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.200 வரை விற்பனையாகிறது.
பகவா மாதுளைக் கன்றுகளை பயிர் செய்யலாம். ஆவணி, சித்திரை. என வருடத்திற்கு இரண்டு முறை பூ எடுக்கும்.
செடி நடவு செய்து 18 மாதங்களுக்குள் வரும் பூக்களை உருவி விட்டு விடலாம். செடி காய்க்க விடக்கூடாது. 18 மாதங்களுக்குப் பிறகே காய்க்க விட வேண்டும்.
ஒரு மாதத்திற்கு 3 டன் மகசூல் எடுக்கலாம். செடியின் வயது ஐந்து வருடத்திற்கு மேலாகும். லாபமும் பராமரித்து வளர்ப்பதை பொறுத்து கைநிறைய இருக்கும்.