குலைநோயை தாக்குதலை தடுக்க உதவும் ரசாயன முறை இதோ...

 |  First Published May 28, 2018, 12:00 PM IST
Here is the chemical method that helps prevent the attack of the kidneys.



குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் ரசாயன முறை...

** காலை 11 மணிக்குள்ளும், மாலை 3 மணிக்கு மேலும் தான் இம்மருந்துகளை தெளிக்க வேண்டும். கேப்டன், கார்பன்டாசிம், டிரைசைக்லசோல் ஆகிய ஏதோ ஒன்றோடு 2 கிராம், ஒரு கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 
** டீரைசைக்லசோல் ஒரு கிராம், லிட்டர் தண்ணீர் அல்லது கார்பன்டாசிம் ஒரு கிராம், ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகித்ததில் கலந்து தெளிக்க வேண்டும். முழுமையாக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நாற்றங்கால், தூர்வைக்கும் பருவம், கதிர் வெளிவரும் பருவங்களில் 3 அல்லது 4 முறை தெளிக்க வேண்டும்.
 
** நாற்றங்கால் பருவத்தில் குறைந்த தாக்குதல் இருந்தால் கார்பன்டாசீம் அல்லது டிரைசைக்லசோல் ஒரு கிராம், ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
 
** கதிர் உருவாகும் ஆரம்ப நிலை முதல் கதிர் உருவாக்கம் வரை 2.5 சதவீத இலைப் பரப்பு சேதம் இருப்பின் கார்பன்டாசீம் அல்லது டிரைசைக்லசோல் ஒரு கிராம், ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். 
 
** பூக்கும் பருவமும் அதற்குப் பின் வரும் பருவங்களும் 5 சதவீத இலைப்பரப்பு சேதம் அல்லது கழுத்துப் பகுதி தாக்குதல் இருப்பின் கார்பன்டாசீம் அல்லது டிரைசைக்லசோல் 1 கிராம், ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். 
 
** இந்த முறைகளைக் கையாண்டால் விவசாயிகள் குலை நோயில் இருந்து தங்களது பயிர்களை பாதுகாக்கலாம்.

Latest Videos

click me!