மண்புழு உரம் உருவாக்கம் மற்றும் சேமிப்பு முறைகள் இதோ...

 |  First Published Dec 13, 2017, 12:11 PM IST
Here are vermicompost production and storage methods



மண்புழு உரம் உருவாக்கம் 

தொட்டியில் குப்பை இடுதல்

** உரப்பை அமைக்கும்போது, வடிகால் குழி இருக்கும் இடத்தை நோக்கி சரிவு இருக்குமாறு அமைத்தல் சிறந்தது.

** தொட்டியின் அடிப்பகுதியில் தேங்காய் நார் 1/2 அடி உயரதிற்கு இருக்குமாறு சீராக நிரப்ப வேண்டும்.

** அதன்மேல் மக்கிய குப்பைகளையும், சாணத்தையும் 1/2 அடி உயரத்திற்கு மாறி மாறி இருக்குமாறு மண்புழு உரப்பையை நிரப்பவும்.

** அவற்றை நிரப்பும்போது ஈரப்பதம் உள்ளவாறு நீரினைத் தெளிக்கவும்.

** மக்கிய பாலிதீன் பைகள், சிறு கற்கள், குச்சிகள் மற்றும் மக்காத பொருட்கள் இருப்பின் அகற்றி விடவும்.

** இப்பையை நிழல் வலை கொண்டு மேல் புற்த்தில் மூடிவிடவும். இதனால், பறவைகள் மற்றும் கோழிகளிடமிருந்து புழுக்களை பாதுகாக்க முடியும்.

** இரண்டு டன் மக்கிய குப்பைக்கு, 10 கிலோ மண்புழு இட வேண்டும்

உரம் சேமிப்பு முறை

அறுவடை செய்த உரத்தை இருட்டான அறையில் 40% ஈரப்பதத்தில், சூரிய ஒளி படாதவாறு வைக்கவும், இதனால் ஈரப்பதம் வீணாகாது.

மக்கிய உரத்தை பாக்கெட் செய்வதைவிட திறந்த வெளியில் மக்கிய உரத்தை சேமிக்கும்பொழுது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும், இதனால் நுண்ணுயிர்கள் அழிவதை தடுக்கலாம்.

40% ஈரபதத்துடன் வைப்பதால் மண்புழு உரத்தின் தரம் குறையாமல் பாதுகாக்கலாம். 

விற்கும் சமயத்தில் மட்டுமே பாக்கெட் செய்யவும்.

click me!