மண்புழு உர உற்பத்திக்கான இடம் மற்றும் தேவையானப் பொருட்கல் ஒரு அலசல்...

 |  First Published Dec 13, 2017, 12:09 PM IST
Place for vermicompost production and a material item



மண்புழு உர உற்பத்திக்கான இடம்

சற்று மேடான, மழைநீர் தேங்காத, நாள் முழுவதும் நன்கு அடர்ந்த நிழல் இருக்கும் இடமாகவும் இருக்க வேண்டும்

தேவையான பொருட்கள்

மண்புழு உரப்பை 250 gsm அளவிலான கனத்தை கொண்டு இருக்க வேண்டும்.

இதன் நிகர எடை - 4 கிலொ. இதன் அளவு - 12 x 4 x 2 அடிகள்.

இத்தொட்டியை அமைக்க 1" கனம் கொண்ட குழாய் / மூங்கில் / சவுக்கு குச்சிகள்

அவைகளில் 13 அடி நீள்ம் உள்ள 4 குச்சிகளும். 5 அடி நீள்ம் உள்ள 10 குச்சிகளும் தேவை

பைகளை குச்சிகளுடன் கட்ட சிறிய நைலான் சரடுகள்

தொட்டி அமைத்தல்

உரப்பைகளின் வெளிப்புற நீளவாக்கில் இருபுறமும் மேலும் கீழுமாக உள்ள உறையில் 13 அடி நீளமுள்ள குச்சிகளை சொருக வேண்டும்.

பின்னர் 5 அடி குச்சிகளை தொட்டியின் அமைப்புக்கு ஏற்றவாறு பைகளின் நீளவாக்கில் இருபுறமும்  சீராக 5 குச்சிகளை 2 அடி நீளத்தில் மண்ணில் ஊன்ற வேண்டும்.

அவ்வாறு ஊன்றிய பின், உரப்பை விறைப்பாக இருக்குமாறு குச்சிகளில் நைலான் சரடுகள் கொண்டு இறுக்கமாக கட்ட வேண்டும்.

தொட்டியில் எந்த இடத்திலும் தொய்வு இல்லாதவாறு கவனித்து கொள்ளவும்.

பையின் அடிப்பகுதியில் உள்ள வடிகாள் பகுதியின் வெளிப்புரத்தில் மண்ணில் 2 x  2  அடி அகலத்தில், 2 அடி ஆழத்தில் குழி அமைத்து அதில் மண்புழு செறிவூட்டநீர்க் கூட சேகரிக்கலாம்.

click me!