உழவனின் நண்பன், நிலத்தின் வேர்கள், மண்ணின் மைந்தன் என்றெல்லாம் அழைக்கப்படுபவை மண்புழுக்கள்.
மண்புழு உரம் தயாரித்தல்
மண்புழு உரம் தயாரித்தல் என்பது தாவர மற்றும் விலங்கு கழிவுகளை மண்புழுக்களின் உதவியால் மட்க வைத்தலாகும். புழுக்கள் கழிவுகளை ஜீரணிக்க வேண்டுமானால் அக்கழிவுகளின் ஒரு பகுதியாவது மக்கியிருக்க வேண்டும்.
மண்புழு உரம் தயாரிக்கும் முறையை எளிதாக்கி அனைத்து விவசாயிகளும் தங்கள் விளைநிலங்களில் இருந்து கிடைக்கும் இயற்கை கழிவுகளையும் மக்கவைக்கும் மண்புழுக்களையும் கொண்டு தங்கள் இடத்திலேயே மண்புழு உரத்தை எளிதில் தயாரிக்க குறைந்த முதலீடு மண்புழு உரப்பை உதவுகிறது.
மண்புழு உரம் தயாரிக்க ஏற்ற மண்புழு
1. ஆப்ரிக்கன் மண்புழு
2. சிவப்பு மண்புழு
3. மக்கும் புழு
இவற்றில் ஆப்ரிக்கன் மண்புழு குறைந்த கால இடைவெளியில் அதிக அளவு மண்புழு உரம் மற்றும் புழுக்களையும் உற்பத்தி செய்வதால் உரம் தயாரிக்க மிகவும் சிறந்தது
மண்புழுக்களுக்கு உகந்த கழிவுகள்
மட்கும் எந்த ஒரு அங்ககக் கழிவுகளையும் உரம் தயாரிக்க பயன்படுத்தலாம்
உதாரணம்: பண்ணைக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், இலைச் சருகுகள், கால்நடை கழிவுகள், ஆலைக் கழிவுகள் போன்றவை.