களைக் கட்டுப்பாடு:
பருத்திக்கு புளுகுளோரின் என்ற களைக்கொல்லியை ஹெக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் நீருடன் கலந்து தெளித்தலின் மூலம் முதல் 25 நாள்களுக்குள் களைகளைத் தடுக்கலாம். பின்பு 30 அல்லது 40ஆவது நாளில் களைக்கொத்தியைக் கொண்டோ, தந்துலு கலப்பையைக் கொண்டோ இரண்டாவது முறையாக களைகளை அப்புறப்படுத்தவேண்டும்.
undefined
இலைவழி தெளித்தல்:
பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்க ஒரு கிலோ யூரியாவை 1 லிட்டர் நீரில் கலந்து 45, 65 நாள்களில் இலைகளில் தெளிக்கவேண்டும்.
பயிரிடை நேர்த்தி:
விதைத்த 30, 45ஆவது நாள்களில் நீண்ட தகடுக்கத்திக் கலப்பையால் உழுவது செடி வளர்ச்சிக்கு உகந்ததாகிறது. களையைக் கட்டுப்படுத்த மட்டுமன்றி நீரைச் சேமிக்கவும் உதவுகிறது. மண் ஈரம் காக்கும்பொருட்டு மண் போர்வை அமைத்து பயிர் வறட்சியில் வாடுவதைத் தடுக்கலாம். இதற்காக கசிவுநீர், பயிர்க் கழிவுகளைப் பயன்படுத்தலாம்.
பயிர் வினையியல்:
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் காட்டன் ப்ளûஸ ஏக்கருக்கு 2.5 கிகி 200 லிட்டர் நீரில் கலந்து இலைத் தெளிப்பாக அளிப்பதன் மூலம் பூ உதிர்தல் குறைகிறது, காய் வெடித்தல் அதிகரிக்கிறது, விதை பருத்தி மகசூல் அதிகரிக்கிறது. மேலும், வறட்சியைத் தாங்கும் தன்மை கிடைக்கிறது.
அறுவடை:
உயர்ந்த அளவில் விளைவிக்கும் பருத்தியை கட்டுக்கோப்பாக அறுவடை செய்வதும் கிடைத்த மகசூலை தரம் பிரித்து தக்கவாறு சேமித்து பின்பு விற்பனை செய்வதும் பருத்திச் சாகுபடியின் இறுதிக் கட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான பணி.