பருத்தி சாகுபடியில் விதைப்பு:
நிலத்தில் விதைகளை குறிப்பிட்ட ஆழத்தில் விதைக்கும்போது பயிர்களின் முளைப்புத்திறன் அதிகரித்து பயிரின் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. பருத்தி விதையை 5 செமீ ஆழத்தில் விதைக்கவேண்டும். கொரு என்ற விதைப்பான் அல்லது டிராக்டரின் மூலம் விதைக்கக்கூடிய உழவு விதைப்பான் கொண்டும் விதைக்கலாம்.
undefined
பயிர் இடைவெளி:
தனிப்பயிராக ரகங்களையோ வீரிய ஒட்டு ரகங்களையோ சாகுபடி செய்யும்போது வரிசை இடைவெளியாக 45 செமீ செடிகளுக்கு இடையே 15 செமீ அளவு இடைவெளி விடவேண்டும். ஊடுபயிர் சாகுபடி செய்யும்போது ஓர் இரட்டை வரிசை பருத்தியை அடுத்து இரண்டு வரிசை பயறுவகை பயிர்கள் ஊன்றப்படுகின்றன. இதனால் பருத்திச் செடியின் எண்ணிக்கை குறைவதில்லை.
அமில விதை நேர்த்தி, பஞ்சு நீக்கிய விதைகளில் பூஞ்சாணக் கொல்லி நேர்த்தி ஆகியவற்றை இறவைப்பயிருக்கு செய்வதைப்போன்று செய்ய வேண்டும்.
பலபயன் கருவியால் விதைப்பு, உரமிடலை ஒரேநேரத்தில் செய்யலாம். கூம்பில் உரக்கலவையை இட்டு நிரப்பி இயக்கவேண்டும். மூன்று பேரைப் பயன்படுத்தி இருவர் பருத்தியையும் ஒருவர் பயறுவகை விதைகளையும் இடவேண்டும்.
பருத்தி, பயறு வகை விதைகளை 5 செமீ ஆழத்தில் கரிசல் மண்ணில் விதைக்கும்போது குறைந்த மழையால் அவை பாதிக்கப்படுவதில்லை. அதிக மழை பெய்யும்போது மட்டுமே நீர் இந்த ஆழத்துக்கு இறங்கி விதைகள் முளைக்கின்றன.
இடைவெளி நிரப்புதல்: ஒவ்வோர் இடைவெளியிலும் 3 அல்லது 4 விதைகளை விதைக்கவேண்டும்.
ஒரு குத்துக்கு இரண்டு செடிகளைவிட்டு, விதைத்த 15ஆவது நாள் செடிகளைக் களைத்துவிட வேண்டும். பயறுவகை செடிகளை விதைத்த 20ஆவது நாள் தட்டைப்பயறுக்கு 20 செமீ, மற்றப் பயிர்களுக்கு 15 செமீ அளவில் விட்டு களைந்துவிட வேண்டும்.