நோய்க்கு எதிரான தடுப்பு முறைகள்
** கால்நடைகள் நோய்வாய்ப்பட்ட அறிகுறியாகவோ, உணவு உட்கொள்ளுதல் குறைவாக, காய்ச்சல், வழக்கத்திற்கு மாறான கலைப்புடன், வழகத்திற்குமாறான நடவடிக்கையுடன் காணப்பட்டால் நாம் கவனமுடன் செயல்பட வேண்டும்.
** நோய்வாய்ப்பாட்டிருப்பதாக எண்ணினால் அருகில் உள்ள கால்நடை மருத்துவ உதவி மையத்தை அணுகி உதவி கோரலாம்.
** பொதுவாக கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களுக்கு எதிராக கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்.
** ஒரு வேளை எதிர்பாராமல் ஏதேனும் தொற்று நோய் ஏற்பட்டால், உடனடியாக நோய் தாக்கப்பட்ட கால்நடையை மற்ற ஆரோக்யமாக உள்ள கால்நடைகளிடமிருந்து தள்ளி ஒதுக்கி வைக்க வேண்டும். மற்றும் தேவையான நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். (நோய் தடுப்பு முறை பட்டியல்கள் அட்டவணை IX ல் தரப்பட்டுள்ளது)
** புரூசெல்லா நோய், எலும்புருக்கி நோய், மடியழற்சி நோய் போன்ற நோய்களுக்கு சரியான கால இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
** குடற்புழு நீங்க மருந்துகளை தவறாமல் வழங்க வேண்டும்.
** கால்நடைகளை ஒவ்வொரு நேரமும் சுத்தப்படுத்தி ஆரோக்கியமான சூழ்நிலையில் பராமரிக்க வேண்டும்.