கால்நடைகளிடம் ஒரு நாளைக்கு எத்தனை முறை பால் கறக்கலாம். இன்னும் நிறைய தகவல்கள் உள்ளே...

 |  First Published Dec 26, 2017, 12:34 PM IST
How many times a day can be eaten by livestock. More information inside ...



கால்நடைகளிடம் பால் கறக்கும் முறை...

** ஒரு நாளைக்கு 2-3 முறை பால் கறக்க வேண்டும்.

** பால் கறக்க குறிப்பிட்ட நேரத்தை தேர்பு செய்ய வேண்டும்.

** ஒரு முறை பால் கறப்பதற்கு எட்டு நிமிடங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

** கூடுமானவரை வழக்கமாக பால் கறப்பவரே பால் கறக்க வேண்டும்.

** பால் கறக்க சுத்தமான இடத்தை பயன்படுத்த வேண்டும்.

** மாட்டின் மடி மற்றும் காம்புகளை கிருமிகளை தடுக்கும் மருந்து கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். பால் கறப்பதற்கு முன் மிதமான சூடான தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

** பால் கறப்பவருக்கு ஏதேனும் தொற்று நோய் இருந்தால், நோய் கிருமிகளை தடுக்கும் மருந்துகளை கொண்டு அவருடைய கைகளை ஒவ்வொருமுறை பால் கறக்கும் போதும் சுத்தப்படுத்த வேண்டும்.

** பால் கறப்பதற்கு முழுகைகளை பயன்படுத்தி வேகமாகவும், முழுமையாகவும் காம்புகளை உருவி கறக்க வேண்டும்.

** நோய் வாய்ப்பட்ட பசு / எருதுவின் பால் கறப்பதற்கு முன் நோய் பரவாமல்  இருக்க தடுப்பு மருந்து அளித்த பிறகே பால் கறக்க வேண்டும்.

click me!