நிலக்கடலையின் உரத் தேவைகளை பூர்த்தி செய்ய இதோ எளிய வழிகள்...

 
Published : Dec 15, 2017, 12:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
நிலக்கடலையின் உரத் தேவைகளை பூர்த்தி செய்ய இதோ எளிய வழிகள்...

சுருக்கம்

Here are the simple ways to meet the fertilizer requirements of groundnut ...

நிலக்கடலையின் உரத் தேவைகள்

மண் பரிசோதனை அடிப்படையில் தழைச் சத்து, மணிச் சத்து மற்றும் சாம்பல் சத்தை ஆய்வு செய்ய வேண்டும்.மண் பரிசோதனை செய்யாவிட்டால் ஏக்கர் ஒன்றுக்கு யூரியா

• மானாவாரியில் 9 கிலோவும், 

• இறவையில் 15, 

• சூப்பர் பாஸ்போட் மானாவாரியில் 25, 

• இறவைக்கு 85, 

• பொட்டாஷ் 3 கிலோவும், 

• இறவையில் 36 கிலோ 

உரங்களை அடி உரமாக இட வேண்டும். இத்துடன் 5 கிலோ நுண்ணூட்டச் சத்துக் கலவையை தேவையானயளவு மணலுடன் கலந்து விதைத்தவுடன் நிலத்தின் மேல் சீராக தூவ வேண்டும்.

ஜிப்சம் இடுதல்:

நிலக் கடலைப் பயிரில் நன்கு திரட்சியான பருப்புகள் உருவாக சுண்ணாம்புச் சத்து தேவைப்படுகிறது. அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இடவேண்டும். மேலும் நிலக்கடலையின் விழுதுகள் இச்சத்தை நேரடியாக கிரகித்துக் கொள்ளக் கூடியதாக இருப்பதால் காய்கள் உருவாகும் தருணமான விதைத்த 40-45 வது நாட்களில் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைத்தல் அவசியம். ஜிப்சத்தில் 24 சதம் சுண்ணாம்புச் சத்தும், 18.6 சதம் கந்தகச் சத்தும் உள்ளது.

போராக்ஸ் இடுதல்:

விதையில்லா காய்கள் வராமல் தடுக்க ஏக்கருக்கு போராக்ஸ் 4 கிலோவை விதைத்த 45-வது நாளில் ஜிப்சத்துடன் கலந்து இட வேண்டும்.

ஊட்டச் சத்து கரைசல் தெளித்தல்:

நிலக்கடையில் நல்ல மகசூல் பெற ஊட்டச் சத்து கரைசல் தெளித்தல் மிகவும் அவசியம். ஒரு ஏக்கருக்கு டைஅம்மோனியம் பாஸ்பேட் ஒரு கிலோவை 20 லிட்டர் தண்ணீரில் இரவில் ஊற வைத்து தெளிந்த நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நீரில் போராக்ஸ் 300 கிராம், ஜிங்க் சல்பேட் 250 கிராம், பெரஸ் சல்பேட் 500 கிராம் ஆகியவற்றை கலந்து இத்துடன் ப்ளானோபிக்ஸ் என்ற வளர்ச்சி ஊக்கியை 100 மி.லி. கலக்க வேண்டும். 

இக்கரைசலை 100 லிட்டர் கரைசலாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இவற்றை விதைத்த 30 மற்றும் 45 நாட்களில் மாலை வேளையில் தெளிக்க வேண்டும். இதன் மூலம் நல்ல திரட்சியான காய்கள் அதிகம் பிடிப்பதுடன், எண்ணெய் சத்தின் சதவீதமும் அதிகரிக்கும்.

PREV
click me!

Recommended Stories

Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!
Business: இப்படியொரு வாய்ப்பா...? இனி விவசாயமும் ஸ்டார்ட்அப் தான்! ரூ.25 லட்சம் வரை அரசு சப்போர்ட்!