மணிலா பயிரிடும்போது அவற்றிற்கு எந்த மாதிரியான உரங்களை இடலாம்... 

 
Published : Dec 15, 2017, 12:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
மணிலா பயிரிடும்போது அவற்றிற்கு எந்த மாதிரியான உரங்களை இடலாம்... 

சுருக்கம்

Any kind of fertilizers can be applied when manila cultivated

மணிலா

அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் விதைக்கப்பட்டுள்ள மானாவாரி மணிலா பயிர்  பூ பூக்கும் நிலையை எட்டியுள்ள நிலையில் காய்கள் முதிர்ச்சி அடையும் பருவம் வரை சுண்ணாம்புச் சத்து 90 சதவீதத்துக்கும் அதிகமாகத் தேவை. இதனால் மணிலாவுக்கு ஜிப்சம் மேலுரமாக இடுவது அவசியம். 

சுண்ணாம்பு சத்தை மணிலா செடிகள் வேர் மூலம் மண்ணில் இருந்து உறிஞ்சி, இலை திசுக்களில் நிலை நிறுத்திக் கொள்கிறது. பின்னர் வளரும் காய்களுக்கு சத்தை விழுது மூலம் இறங்கிச் செல்வதைத் தடுத்து விடுவதும் ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது. 

மணிலாவில், சுண்ணாம்புச் சத்து தேவையை பூர்த்தி செய்தால் மட்டுமே, பொக்கு காய்கள் குறைந்து, திரட்சியுடன் கூடிய முதிர்ந்த காய்கள் கிடைக்கும்.

எப்படி இட வேண்டும்?

மணிலா பயிரில், பூ பூத்த நிலையில் இருந்து அதற்கு தேவையான சுண்ணாம்புச் சத்தை மண்ணில் இட்டு ஈடுசெய்ய வேண்டும். இதற்கு ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை மேலுரமாக இட வேண்டும்.

மணிலா விதைப்பு செய்த 6 முதல் 9 வார காலத்துக்குள் மண்ணில் போதிய ஈரப்பதம் உள்ள நேரங்களில் இட்டு, மண்ணை கைக் களை மூலம் 3 செ.மீட்டர் ஆழத்துக்கு நன்கு கிளறி விட வேண்டும்.

மண்ணில் நேரடியாக இடுவதற்கு பதிலாக, நன்கு பொடி செய்த ஜிப்சத்தை துணியின் மூலம், கைகளால் செடிகளைச் சுற்றி தூவி, மண்ணை கிளறி விடுவதால் மட்டுமே, ஒரு ஏக்கரில் 100 முதல் 200 கிலோ அளவுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!
Business: இப்படியொரு வாய்ப்பா...? இனி விவசாயமும் ஸ்டார்ட்அப் தான்! ரூ.25 லட்சம் வரை அரசு சப்போர்ட்!