இலைப்பேன் :
மீத்தைல் டெமட்டான் 25 இசி 200மில்லி (அ) டைமைத்தோயேட் மற்றும் அசு உணி 30 இசி 200 மில்லி (அ) பாஸ்போமிடான் (85 டபுள்யூ. எஸ்.சி) (ஏக்கருக்கு). 120 மில்லி பூச்சிகொல்லியை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
தத்துப்பூச்சி :
மோனோகுரோட்டோபாஸ் 400 மில்லி மற்றும் வேப்ப முத்துச்சாறு 5 சதம் ஆகியவற்றைத் தெளிக்கவும்.
அமெரிக்கன் காய்ப்புழு :
சப்பைக்கட்டும் பருவத்தில் எண்டோசல்பான் 800 மில்லி (அ) பச்சைக்காய்ப்புழு தெளிக்கவும். காய் பிடிக்கும் மற்றும் முற்றும் பருவங்களில் கீழ்க்கண்ட ஏதாவது ஒன்றை 400 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். ஜோலான் 35 இசி ஒரு லிட்டர் (அ) கார்பரில் (50 டபுள்யூ.பி) ஒரு கிலோ (அ) பைரோகுளோரோபாஸ் 50 இசி 600 மில்லி.
சிவப்புக்காய்ப்புழு :
டிரையோசபாஸ் 0.1 சதம் (ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி மருந்து) (அ) எண்டோசல்பான் 0.07 சதம் (பத்து லிட்டர் தண்ணீருக்கு ஏழு மில்லி மருந்து) பருத்தியில் மறுதாம்பு அல்லது கட்டைப்பயிர் விடக்கூடாது. கலந்து தெளித்தால் சிவப்பு காய்ப்புழுவை விரட்டலாம்.
வெள்ளை ஈ
வெள்ளை ஈ நடமாட்டத்தை கணிக்க மஞ்சள் வர்ண பொறிகளை உபயோகிக்கலாம். பருத்தியை சுற்றிலும் கவர்ச்சிப் பயிராக ஆமணக்கு பயிரிடுவதால் புரோடீனியா பூச்சி கவரப்பட்டு, அதில் முட்டையிடுகின்றன. இதனால் இப்பூச்சியின் முட்டைக் குவியல்களை எளிதில் கண்டுபிடித்து அழிக்கலாம்.