சம்பங்கியை தாகும் பூச்சிகளும், அவற்றை தடுக்கும் வழிகளும்
1.. மொட்டு துளைப்பான், ஹெலிகோவெர்பா ஆர்மிஜெரா
undefined
சேதத்தின் அறிகுறி:
இந்தப் பூச்சி மெதுவாக பூக்களைத் தாக்கும்.
புழுக்கள் மொட்டுகள் மற்றும் பூக்களை துளைத்து செல்லும்.
மொட்டுக்களில் உள்ளிருப்பவைகளை உண்ணும்.
கட்டுப்படுத்தும் முறை:
தாக்கப்பட்ட மொட்டுகளை சேகரித்து அழித்துவிடவும்.
விளக்குப்பொறி வைத்து அந்துப்பூச்சியை அழித்துவிடலாம்.
மிதைல் பாரத்தியான் 0.05 சதவிதம் மருந்தினை முட்டைகள் தழைகளிலும், மொட்டுகளிலும் காணப்படும்பொழுது தெளிக்கவும்.
வேப்பம் எண்ணெய் 0.5 சதவிதம் தெளித்தால் பூச்சிகளை விரட்டும்.
2.. அசுவினி, ஏபிஸ் கிராசிவோரா
சேதத்தின் அறிகுறி:
குஞ்சுகளும் பூச்சிகளும் மொட்டுகளிலும், இலைகளிலும் தாக்கும்
பூச்சியின் விபரம்:
பூச்சி சிறியதாகவும், மென்மையான உடலைக் கொண்டும், கருப்பு நிறத்தில் தோன்றும்
கட்டுப்படுத்தும் முறை:
மாலத்தியான் 0.1 சதவிதம் தாக்கப்பட்ட இலைகளில் தெளிக்கவும்