1.. வேம்பு புங்கன் கரைசல்
தேவையான பொருட்கள் :-
undefined
வேப்பெண்ணை ஒரு லிட்டர் புங்கன் எண்ணை ஒரு லிட்டர் கோமியம் (பழையது) பத்து லிட்டர் காதி சோப்பு கரைசல் அரை லிட்டர் இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.
2.. மண்பானை செடித்தைலம்
தேவையான பொருட்கள்:
வேம்பு இலை 50 கிராம்
எருக்கு இலை 50 கிராம்
நொச்சி இலை 50 கிராம்
பொடி செய்த பயறுவகைகள் (ஏதேனும் ஒரு பயறு) 50 கிராம்
தயிர் அல்லது அடர்த்தியான மோர் 1 லிட்டர்
தண்ணீர் 1.5 லிட்டர்
தயாரிக்கும் முறை:
முதலில் இலைகளை நன்கு அரைத்து கூழாக்கிக் கொள்ளவும். அதை அரைத்து வைத்துள்ள பயிர் பொடியுடன் கலக்கவும்.
பின் தயிர் மற்றும் தண்ணீருடன் இவ்விழுதை நன்கு கலக்கவும். இதை ஒரு மண் பானையில் வைத்து, அதன் வாயை ஒரு துணியைக் கொண்டு மூடிவிட வேண்டும்.
பின், ஒவ்வொரு நாளும் இதை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கலக்க வேண்டும்.
இவ்வாறு 15-20 நாட்களுக்கு பிறகு, இந்த தைலத்தினை பயன்படுத்தலாம்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு இந்த தைலத்தினை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.