பயிர்களுக்கு அரப்பு மோர் கரைசலை தெளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்...

 |  First Published May 19, 2018, 1:24 PM IST
The benefits of sprinkling the strawberries solution for crops



அரப்பு மோர் கரைசல்
 
தேவையான பொருட்கள்

அரப்பு இலை(அ) உசிலை மர இலை-2 கிலோ.

Latest Videos

undefined

புளித்த மோர்-5 லிட்டர்.

மண்பானை.

தயாரிக்கும் முறை:​​

நமது ஊர்களில் அதிகமாக கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை 2 கிலோ அளவில் பறித்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும்.

இதிலிருந்து 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். 

பின்னர் இந்தக் கரைசல் கலவையை மண்பானையில் ஒருவார காலத்துக்கு புளிக்க விட வேண்டும்.

அரப்பு மோர் கரைசல் எப்படி பயன்படுத்துவது?

ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன் 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். 

கை தெளிப்பானில் தெளிக்கும் போது ஒரு டேங்க் அளவுக்கு தெளிக்கும் அளவு இது ஒரு ஏக்கர் பயிருக்கு 10 தெளிப்பான் டேங்க் அளவுக்கு தெளிக்க வேண்டியிருக்கும்.

அரப்பு மோர் கரைசல் நன்மைகள் என்ன?

அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் வாயிலாக எளிதாக பயிர் பாதுகாப்பு தொடர் நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியும். 

அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தூர ஓடிவிடும்.குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும்.

அரப்பு மோர் கரைசலை பூப் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். 

நிறையப் பூக்கள் பூக்கும்.

அரப்பு மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல் கிடைக்கும்.


 

click me!