மரங்களைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இதோ...

 |  First Published Jul 7, 2018, 1:14 PM IST
Here are the diseases that affect the trees and the way they control ...



மரங்களைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் இதோ...

1.. அழுகல் நோய்

Tap to resize

Latest Videos

undefined

கழுத்து பகுதி சுருங்கியும் இலைகள் கருகியும் வாடியும் காணப்படும். இதனை கட்டுப்படுத்த பிளாண்டோமைசின் 0.1 சதவீதம் மருந்தை வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.

2.. வாடல் நோய்

இலைகளில் இலை நரம்புகளுக்கிடையே பகுதி பகுதியாக பழுப்பு நிறம் காணப்படும். செடிகள் கருகி வாடிவிடும். நீர் தேங்கி நிற்பதால் வேர்களில் காயங்கள் ஏற்பட்டாலும், பாக்டீரியா மூலம் நோய் உண்டாகிறது. இதனை கட்டுப்படுத்த மரங்களின் அடிப்பாகத்தில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். பிளேண்டோமைசின் 0.1 சதவீதம் மருந்தை வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.

3.. இலை அழிவு நோய்

இலைகள் வறண்டு உதிர்ந்து விடும். நாற்றங்காலில் நெருக்கமாக வைப்பதால் ஏற்படுகிறது. நோய் தாக்கிய செடிகளை நீக்கி விடவேண்டும். பின்னர் டைத்தேன் எம் 45 பூஞ்சாளக் கொல்லியை 0.1 சதவீதம் தெளிக்கவேண்டும்.

4.. வெண்படல பரவு நோய்

இலை முழுவதும் பவுடர் பூசியது போல் வெண்ணிறப்படலம் காணப்படும். இதனால் இலைகள் ஒளிச்சேர்க்கை செய்யமுடியாமல் இறக்க நேரிடும். கந்தகத்தூளை இலைகளில் தூவுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

5.. இளை துரு நோய்

இலைகளின் மேல்பரப்பில் ஆரஞ்சு நிறப்புள்ளிகள் தோன்றி இலைகள் துருப்பிடித்தது போல் காணப்படும். மேலே குறிப்பிட்டது போல் கந்தக தூளை தூவுவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம்.


 

click me!