1.. புள்ளி இலை வண்டு
வண்டு மற்றும் புழு பருவம் இலைகளில் உள்ள பச்சையத்தை சுரண்டி உண்ணும். பிறகு சுரண்டிய பகுதிகள் காய்ந்து விடும். வண்டுகள் மிக வேகமாக பறக்கக் கூடிய திறன் வாய்ந்தது. புழு ஒரே இடத்தில் நிலையாக நின்று சாப்பிடும்
undefined
பூச்சியின் விபரம்
ஏபிலக்னா விஜின்டிஆக்டோபங்க் டேட்டா என்ற வண்டில் ஒவ்வொரு இறக்கையிலும் 14 புள்ளிகள் காணப்படும். எ. டியேகேஸ்டிமா என்ற வண்டின் இறக்கையில் 6 புள்ளிகள் காணப்படும்.
நீள்வடிவ முட்டையினை இலையில் இடுகிறது. புழுவின் உடலில் முள் போன்ற பகுதிகள் காணப்படும். முழு வளர்ச்சியடைந்த புழுவின் காலம் 10 முதல் 35 நாட்கள் ஆகும். கூட்டுப்புழுவானது இலை மற்றும் தண்டு பகுதிகளில் காணப்படும்.
கூட்டுப்புழு நிலையின் காலம் 3 முதல் 5 நாட்கள் ஆகும். மொத்த பூச்சியின் வாழ்வுக் காலம் 20 முதல் 40 நாட்கள் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
முட்டை, புழு மற்றும் வண்டுகளை சேகரித்து அழித்து விட வேண்டும். கார்பரில் 50 சதம் 2 கிராம்/ லிட்டர் அல்லது எண்டோசல்பான் 35 இசி 2 மில்லி / லிட்டர் அல்லது மாலத்தியான் 50 இசி 2 மில்லி / லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
2.. செம்பான் சிலந்தி (டெட்ராநைகஸ் சின்னபெரியன்ஸ்)
இளம் குஞ்சுகளும் முதிர்ந்த சிலந்திகளும் கூட்டம் கூட்டமாக இலையின் அடிப்பகுதியிலிருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் சுருங்கி காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கவும்.
டைகோபால் 18.5 இசி 2.5 மி.லி. / லிட்டர் (அ) நனையும் கந்தகத் தூள் 50 சதவீதம் 2 கிராம் / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.