நெற்பயிரில் நோய்க் கட்டுப்பாட்டை தடுக்க இதுதான் சரியான வழி...

 |  First Published May 30, 2018, 1:45 PM IST
Here are the diagnostic management methods in rice ...



இலைப் புள்ளி நோய், குலைநோய் மற்றும் நுண்ணுயிர் இலைக்கருகல் நோய் போன்றவை தாக்கும்.

இந்நோயும் பரவலாக காணப்படும் ஒன்று இதற்கு, 1. சோற்றுக் கற்றாழை- 3-5 கிலோ 2. இஞ்சி – 200 கிராம். 3. புதினா அல்லது சவுக்கு இவை-2 கிலோ. இவற்றை முன்னர் கூறியபடி வேக வைக்க வேண்டும். 

Tap to resize

Latest Videos

undefined

வெந்த பின்னர் ஆற வைத்து வடித்த சாற்றுடன் மஞ்சள்தூள் 1 லிட்டர், சூடோமோனஸ் புளோரசன்ஸ் 500 கிராம் 1 கிலோ சேர்த்து 12 மணி நேரம் ஊறவைத்துக் தெளிக்க வேண்டும். இதனால் நோய் கட்டுப்படும்.

இலைப்பேன்...

செம்பழுப்பு நிறமுடைய இலைப் பேன்களும், அதன் குஞ்சுகளும் இலையின் அடிப்புறத்தில் தங்கி இலைச் சாற்றினை உறிஞ்சி வாழ்கின்றன. இதனால் இலைகளின் ஓரங்கள் சுருண்டு வாடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட கரைசல் பயன்படுகிறது. 

உண்ணிச் செடி, வேம்பு, நொச்சி, புகையிலை, வசம்பு, பூண்டு, சீதா, பீச்சங்கு, வில்லவம் சோற்றுக்கற்றாழை, பிரண்டை இவற்றில் ஏதாவது 4 இலைவகைகளை துண்டு துண்டாக நறுக்கி அத்துடன் 1 கிலோ மஞ்சள் தூள் சேர்த்து ஏற்கனவே சொன்ன ஊறல் முறையில் ஊறவைத்து 7 நாட்கள் கழித்து வடிகட்டி 1 லிட்டருக்கு 10 லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும். 

இலைப்பேன் தாக்குதலை வைத்து 7-10 நாட்கள் இடைவெளியில் 2 அல்லது 3 முறை தெளிக்க வேண்டும். வேகல் முறையிலும் தயாரித்துத் தெளிக்கலாம். பொதுவாக வேகல்முறையில் உடனடியாக நமக்கு கரைசல் கிடைக்கின்றது. ஊறல்முறையில் சிறிது காத்திருக்க வேண்டும். 

புழுத்தாக்குதல்.. 

புழுத்தாக்குதல் அல்லது இலைத்துளைப்பான் அல்லது தண்டுதுளைப்பான் சேதத்தில் இருந்து பாதுகாக்க பின்வரும் கரைசல் தேவைப்படுகிறது. சீதா விதை – 100 கிராம் பீச்சங்கு – 1 கிலோ ஆடாதொடா – 500 கிராம் சிறியா நங்கை – 500 கிராம் தங்கரளி காய்/பழம் – 1 கிலோ நொச்சி – 1 கிலோ சோற்றுக் கற்றாழை – 1 கிலோ இவற்றைப் பசையாக அரைத்துக் கொள்ளவும். 

பின்னர் பத்து லிட்டர் கொதிநீரில் புகையிலைத் தூள் 1கிலோ கலந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மேலே சொன்ன பசையுடன் புகையிலைச் சாறையும் சேர்த்து 2 முதல் 3 நாள் ஊறல் போட வேண்டும். புளிப்புச் சுவை வரும். மஞ்சள் தூள் 1 கிலோவுடன் பசைபோல ஆக்கத் தேவையான அளவு களிமண் மற்றும் சாணம் இவற்றை மூன்று நாள் ஊறிய கலவையுடன் சேர்த்து பசையாக ஆக்கவும். 1 கிலோ பசையை எடுத்து 100 முதல் 125 லிட்டர் நீரில் கலந்து பயிருக்குத் தெளிக்கவும்.

இலைப்புள்ளி நோய்...

இந்நோயின் தொடக்கத்தில் இலைகளின் மேல்புறத்தில் நீண்ட கண் வடிவப் புள்ளிகள் தென்படும். இப்புள்ளிகளின் நடுவில் பூசண வித்துக்கள் காணப்படும். நோய் பெரிதாகும்போது பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலைகள் மஞ்சளாகி பின்னர் கருகிவிடும். 

இதனைக் கட்டுப்படுத்த சோற்றுக் கற்றாழை 3 முதல் 5 கிலோ காகிதப்பூ இலை 3 முதல் 5 கிலோ உண்ணிச் செடி இலை 3 முதல் 5 கிலோ சீதா இலை 3 முதல் 5 கிலோ பப்பாளி இலை 3 முதல் 5 கிலோ இவற்றில் ஏதாவது இரண்டு வகையை மட்டும் எடுத்து வேகல்முறை அல்லது ஊறல் முறையில் கரைசலை தயார் செய்து பயன்படுத்தலாம்.

click me!