வெண்டையில் மேற்கொள்ள வேண்டிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் இதோ...

 
Published : Jun 01, 2018, 02:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
வெண்டையில் மேற்கொள்ள வேண்டிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் இதோ...

சுருக்கம்

Here are the crop protection measures to be carried out on the bundle.

காய்த் துளைப்பான்: 

வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த முறைகளை மேற்கொள்ளவேண்டும். இனக்கவர்ச்சிப் பொறி ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். 

காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்து விடவேண்டும். ஹெக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விடவேண்டும். 

கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும் இவற்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது வேப்பம் கொட்டைப் பொடி 50 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும். 

சாம்பல் நிற வண்டு

சாம்பல் நிற வண்டைக் கட்டுப்படுத்த கார்போபியூரான் 3 ஜி. குருணை மருந்து ஹெக்டேருக்கு 12 கிலோ இடவேண்டும். 

நூற்புழு தாக்குதலைத் தடுக்க: 

ஹெக்டேருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும் போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு ஹெக்டேருக்கு கார்போபியூரான் 3ஜி குருணை மருந்து 1 கிலோ அல்லது போரேட் 10ஜி குருணை மருந்து கிலோ இடவேண்டும். 

அசுவினிப் பூச்சியை கட்டுப்படுத்த:

மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி அல்லது டெமெத்தோயேட் 2 மில்லி மருந்து இவற்றுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும். 

மஞ்சள் நரம்புத் தேமல் நோய்: 

இது மிகவும் அதிக அளவில் வெண்டையைத் தாக்கக் மூடிய ஒரு நச்சுயிரி நோய் ஆகும். இந்நோய் வெள்ளை ஈ என்ற பூச்சிகளால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. இப்பூச்சியை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு 2 மில்லி வேம்பு எண்ணை, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கவேண்டும். 

கோடை காலத்தில் இந்நோய் மிக அதிக அளவில் வெண்டையைத் தாக்கும். இந்தப் பருவத்தில் நோயை எதிர்த்து வளரப்கூடிய பார்பானி கிராந்தி போன்ற ரகங்களைப் பயிரிடுவது நல்லது. மேலும் இந்நோயைத் தாங்கி வளரக் கூடிய ரகங்களான பார்பானி கிராந்தி, அர்கா அனாமிகா மற்றும் அர்கா அபஹாப் போன்றவற்றை சாகுபடி செய்யவேண்டும். 

சாம்பல் நோய்:

சாம்பல் நோய் என்பதும் அடிக்கடி வெண்டையை தாக்கும் நோயாகும். இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்த தெளிக்க வேண்டும். பிறகு 15 நாள்கள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்க வேண்டும். பிறகு இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்கவெண்டும்.


 

PREV
click me!

Recommended Stories

Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!
Business: இப்படியொரு வாய்ப்பா...? இனி விவசாயமும் ஸ்டார்ட்அப் தான்! ரூ.25 லட்சம் வரை அரசு சப்போர்ட்!