** குஞ்சுக் கொட்டகை
இக்கொட்டகை முட்டைக் கோழிக்குஞ்சுகளின் 0 முதல் 8 வார வயது வரை பராமரிக்க உபயோகிக்கப்படுகிறது.
** வளரும் கோழிக் கொட்டகை
இக்கொட்டகை முட்டைக் கோழிகளின் 9-18 வார வயதில் பராமரிக்கப் பயன்படுகிறது.
** குஞ்சுக் கோழி மற்றும் வளரும் கோழிக்கொட்டகை
இக்கொட்டகையில் கோழிகளை 0-18 வார வயதில் வளர்க்கப் பயன்படுகிறன்றது.
** முட்டைக்கோழிக் கொட்டகை
பதினெட்டு வார வயதிலிருந்து 72 வார வயது வரை முட்டைக் கோழிகளை வளர்க்க இக்கொட்டகை பயன்படுகிறது.
** கறிக்கோழிக் கொட்டகை
இக்கொட்டகையில் கறிக்கோழிகளை 6 வார வயது வரை வளர்க்கப் பயன்படுகிறது.
** இனப்பெருக்கக் கோழிக் கொட்டகை
இக்கொட்டகைகளில் பெட்டைக்கோழிகளும், சேவல்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வளர்க்கப் பயன்படுகிறது.
** சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட கொட்டகை
இக்கொட்டகைகளில் கோழிகள் வளர்வதற்கேற்றவாறு கொட்டகையின் சுற்றுப்புற சூழ்நிலை கட்டுப்படுத்தப்படுகிறது.