கோழிப் பண்ணைகளின் வடிவமைப்புகள் இப்படிதான் இருக்க வேண்டும்?

Asianet News Tamil  
Published : Oct 31, 2017, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
கோழிப் பண்ணைகளின் வடிவமைப்புகள் இப்படிதான் இருக்க வேண்டும்?

சுருக்கம்

Should the poultry farm designs look like this?

** ஒரே கொட்டகை மட்டுமே இருப்பதால் ஒரு சிறிய கோழிப்பண்ணைக்கென தனியான வடிவமைப்புகள் தேவைப்படாது.

** நடுத்தர மற்றும் பெரிய பண்ணைகளுக்கு பண்ணை வீடுகளை அமைப்பதில் சரியான வடிவமைப்பு தேவை.

** பார்வையாளர்களையும், வெளியிலிருந்து வரும் வாகனங்களையும் கோழிகளுக்கு அருகில் அனுமதிக்காதவாறு பண்ணைகள் வடிவமைக்கப்படவேண்டும்.

** தூய காற்று குஞ்சுக்கொட்டகையில் முதலில் நுழைந்து, பிறகு வளரும் கோழிக் கொட்டகையில் சென்று கடைசியாக முட்டைக்கோழி கொட்டகைக்குள் செல்லுமாறு கோழிப்பண்ணைக் கொட்டகைகள் வடிவமைக்கப்பட வேண்டும். இதனால் முட்டைக் கோழிகளிடமிருந்து குஞ்சுக் கோழிகளுக்கு நோய்க் கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.

** குஞ்சுக் கோழிக் கொட்டகைக்கும், வளரும் கோழிக் கொட்டகைக்கும் இடையில் குறைந்தது 50-100 அடி இடைவெளியும், வளரும் கோழிக் கொட்டகைக்கும் முட்டைக் கோழிக் கொட்டகைக்கும் இடையில் 100 மீட்டர் இடைவெளியும் இருக்க வேண்டும்.

** முட்டை சேமிக்கும் அறை, அலுவலகம், தீவனம் சேமிக்கும் அறை போன்றவை பண்ணையில் நுழைவு வாயிலிலேயே அமைக்கப்படுவதால், கோழிப் பண்ணைகளைச் சுற்றி ஆட்கள் நடமாடுவதைத் தவிர்க்கலாம்.

** இறந்த கோழிகளைப் புதைக்கும்குழி, மற்றும் நோய் பாதிக்கப்பட்ட கோழிகளைப் பராமரிக்கும் அறை போன்றவை பண்ணையின் ஒரு மூலையில் அமைக்கப்பட வேண்டும்.

 

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!