கோழிப்பண்ணைகளை அமைப்பது ஏன்?
** பல்வேறு விதமான தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க கோழிப்பண்ணைகள் அமைக்க வேண்டும்.
** எளிதாகவும், பொருளாதார ரீதியாக குறைந்த செலவிலும் கோழிப்பண்ணையை நடத்த கோழிப்பண்ணைகள் அமைக்க வேண்டும்.
** அறிவியல் பூர்வமாகவும், கட்டுப்பாடான முறையிலும் கோழிகளுக்குத் தீவனமளிக்க கோழிப்பண்ணைகள் அமைக்க வேண்டும்.
** கோழிகளைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தில் முறையாகப் பேண கோழிப்பண்ணைகள் அமைக்க வேண்டும்.
** நோயினைக் கட்டுப்படுத்த கோழிப்பண்ணைகள் அமைக்க வேண்டும்.
** கோழிப்பண்ணையினை முறையாக மேலாண்மை செய்ய கோழிப்பண்ணைகள் அமைக்க வேண்டும்.
இடத்தை எப்படி தேர்ந்தெடுப்பது?
** வசிப்பிடங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் கோழிப்பண்ணைகள் தொலைவில் இருக்க வேண்டும்.
** கோழிப்பண்ணைக்கு நன்றாக சாலை வசதிகள் இருக்க வேண்டும்.
** அடிப்படைத் தேவைகளான தண்ணீர், மின்சார வசதி போன்றவை இருக்க வேண்டும்.
** குறைந்த கூலிக்கு பண்ணையாட்கள் கிடைக்கும் இடத்தில் பண்ணை அமைக்க வேண்டும்.
** கோழிப்பண்ணை நல்ல மேடான இடத்தில் இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் இடத்தில் இருக்கக் கூடாது.
** கோழிப்பண்ணை அமைக்கும் இடத்தில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும்.