மண் புழு உரம் தயாரிக்கும்போது எழும் சில சந்தேகங்களும், அவற்றிற்கான தீர்வுகளும் இதோ...

 
Published : Jan 23, 2018, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
மண் புழு உரம் தயாரிக்கும்போது எழும் சில சந்தேகங்களும், அவற்றிற்கான தீர்வுகளும் இதோ...

சுருக்கம்

Here are some doubts and solutions for the preparation of soil worm.

மண் புழு உரம் தயாரிக்கும்போது எழும் சந்தேகம் மற்றும் பதில்கள்:

சந்தேகம் 1.. 

பொதுவாக மண் புழு உர படுக்கையில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டுமா?

பதில் 

முதலில் 15 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் தெளித்து வரவேண்டும். பிறகு ஈரத்தின் அளவை பொருத்து மூன்று நாடகளுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து வரவேண்டும்

சந்தேகம் 2
சாணக்கரைசல் குளோரின் கலந்த குடிநீரில் தயாரிக்கலாமா?

பதில் 

குடிநீரில் குறைந்த அளவே குளோரின் இருப்பதனால் பயன்படுத்தலாம்.

சந்தேகம் 3

மண் புழு உரம் பயன்படுத்தும் வயலில் பியூரிடான் குருனை பயன்படுத்தலாமா?

பதில் 

இரசாயன உரம் பயன்படுத்தும் அதே வேளையில் பயன்படுத்த கூடாது.

சந்தேகம் 4

மண் புழு உர படுக்கையில் எறும்புகளால் பாதிப்பு உண்டா?

பதில் 

மண் புழு உர படுக்கையில் கட்டாயம் எறும்புகள் மற்றும் பூச்சிகளின் பாதிப்பு இல்லாதவாறு கவனிக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் உர படுக்கையை சுற்றி இரண்டு அடி தள்ளி எறும்பு மருந்தை தூவி பாதுகாக்கலாம்.

சந்தேகம்  5 

உர படுக்கையில் தயாராகும் உரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்?

பதில் 

உரத்தை கண்டிப்பாக பாலித்தீன் பைகளில் அடைக்கக்கூடாது. நல்ல காற்றோட்டம் உள்ள துனிப்பைகளில் சேகரிக்க வேண்டும்.

சந்தேகம் 6

மண் புழு வடிநீர் (வெர்மி ஸ்ப்ரே) பயிர்களுக்கு எப்படி எந்த அளவுகளில் தெளிக்க வேண்டும்?

பதில் 

ஒரு லிட்டர் மண் புழு வடிநீருடன் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து இலை வழியாக தெளிக்கலாம்.

சந்தேகம் 7

மண் புழு உர படுக்கை திறந்த வெளியில் அமைக்கலாமா?

பதில் 

திறந்த வெளியில் மண் புழு உர படுக்கை அமைக்கலாம் ஆனால் நேரடியாக சூரிய ஒளி படக்கூடாது. உர படுக்கையில் உள்ள மண் புழுக்கள் இறந்துவிட வாய்ப்புள்ளது ஆகையால் மர நிழல்களில் அல்லது கீற்றுக்கொட்டகை அமைத்து உர படுக்கை அமைக்கலாம்.

சந்தேகம் 8

மண் புழு உரம் தயாரிக்க என்னென்ன வேளாண் கழிவுகளை பயன்படுத்தலாம்?

பதில்

தினந்தோரும் வீடுகளில் பயன்படுத்தும் வேளாண் கழிவு பொருட்களான காய்கறி கழிவுகள், வைக்கோல், மர இலை தழைகள், மாட்டுச் சாணம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?