ஒருங்கிணைந்த பண்ணையில் ஆடு வளர்ப்பது கூடுதல் லாபம் தரும். எப்படி?

 |  First Published Mar 24, 2018, 12:25 PM IST
Growing up the goat in the combined farm will be an additional profit. How?



ஒருங்கிணைந்த பண்ணை சார்ந்த விவசாயத்தில் உப தொழிலாக ஆடு வளர்ப்பது கூடுதல் லாபம் ஈட்டித் தரும்.

நாட்டு இன ஆடுகளான குறும்பை, பள்ளை, சேலம் கருப்பு, கன்னி போன்ற ஆட்டினங்களை இறைச்சிக்காக வளர்க்கலாம். ராஜபாளையம் பகுதியில் கன்னி ஆடு இனங்கள் அதிகம் உள்ளது.

Tap to resize

Latest Videos

வேலி தாண்டாத வெள்ளாடு வளர்ப்புதான் உகந்தது. இதற்கு கொட்டில் ஆடு வளர்ப்பு முறை என்று பெயர். சில கிராமங்களில் கால்நடைகளை அவிழ்த்துவிடக் கூடாதென கண்டிப்பு இருக்கிறது.

அடுத்தவர் தோட்டத்தில் மேய்ந்து சேதம் விளைவிக்காத வகையில் இருக்க கொட்டில் ஆடு வளர்ப்பு முறையே உகந்தது. இதற்கு பசுந்தீவன உற்பத்தி முக்கியமானது. புல், செடி, கொடி, இலைகள் போன்ற பசுந்தீவனங்களை உற்பத்தி செய்த பின்னர்தான் கொட்டில் ஆடு வளர்ப்பு திட்டத்தை தொடங்க வேண்டும்.

ஒரு ஏக்கரில் பசுந்தீவனம் உற்பத்தி செய்தால், 25 ஆடுகள் வரை வளர்க்கலாம். இவை இனவிருத்தி செய்து எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வளர்ந்த ஆடுகளை இறைச்சிக்காக விற்கத் தொடங்கலாம்.

ஒருங்கிணைந்த பண்ணை சார்ந்த விவசாயத்தில் கொட்டில் ஆடு வளர்ப்பு முறையை பின்பற்றினால், ஆடுகளின் எரு, புளுக்கை போன்றவை, விவசாய எருவாக உதவும்.

ஆடுகளை வெளியில் மேயவிடாமல் பாதுகாப்பாக பண்ணை விவசாயத்தில் கொட்டில் முறையை பின்பற்றி வளர்த்தால் அதன் மூலம் பல்வேறு வகைகளிலும் விவசாயத்திற்கு நன்மையும், கூடுதல் வருவாயும் கிடைக்கும்.

 

click me!