கொட்டில் முறையில் இந்தவகை வெள்ளாடுகளை இப்படிதான் வளர்க்க வேண்டும்...

 |  First Published Mar 24, 2018, 12:22 PM IST
This kind of cattle should be brought up in kennel ...



ஜமுனாபாரி வெள்ளாடுகளை  கொட்டில் முறையில் வளர்க்க வேண்டிய முறை..

கொட்டில் முறையில் ஆடுகளுக்கு சிறந்த முறையில் கொட்டகை அமைத்து மேய்ச்சலுக்கு அனுப்பாமல், கொட்டகை யிலேயே தீவனம் கொடுத்து வளர்ப்பதாகும்.

Latest Videos

undefined

இந்த முறையில் கொட்டகையில் தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு ஆழ்கூளம் இட்டு வளர்க்கலாம். ஆழ்கூளமாக கடலைப் பொட்டு, மரத்தூள், நெல், உமி போன்றவைகளை உபயோகப்படுத்தலாம்.

இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கூளத்தை வெளியில் எடுத்துவிட்டு பழையபடி மீண்டும் புதிய ஆழ்கூளத்தை நிரப்பவேண்டும். இதனால் சிறுநீர் மற்றும் ஆட்டு சாணத்திலிருந்து வெளியாகும் வாயுக்களான அமோனியா, கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் ஆடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.

இம்முறையில் ஒவ்வொரு ஆட்டிற்கும் 20 சதுரடி இடமும், 15 அடி உயரமும் உள்ள கொட்டகை அமைத்தல் நன்று.

பயன்கள்:

விவசாய நிலமற்றோரும் ஆடு வளர்ப்பை மேற்கொள்ளலாம். சுகாதாரமான பராமரிப்பு முறைகளை கையாண்டால் அதிக எடையுடைய குட்டிகளை பெறமுடியும்.

மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை:

மேய்ச்சல் நிலம் குறைவாக உள்ள இடங்களில் 4-5 மணி நேர மேய்ச்சலுக்கு பிறகு கொட்டகைகளில் அடைத்து பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர்தீவனம் கொடுத்து பராமரிப்பதாகும்.

பயன்கள்:

இம்முறையில் ஆடுகள் நல்ல உடல் வளர்ச்சி அடைந்து அதிக எடையுடனும், ஆரோக்கியத்துடனும் காணப்படுகின்றன. மேய்ச்சல் முறையில் வளரும் ஆட்டின் வளர்ச்சியைவிட 3-4 மடங்கு வளர்ச்சி அதிகமாக இருக்கும். இம்முறையில் வளரும் ஆடுகளில் இருந்து 49 விழுக்காடு இறைச்சி கிடைக்கும்.

தீவிர முறை (உயர் மட்ட தரை முறை):

இம்முறையில் தரையிலிருந்து 3 அடி உயரத்தில் சல்லடைத்தரையை மரப்பலகையிலோ அல்லது கம்பிகளிலோ கட்டவேண்டும். இரு பலகைகளுக்கிøடேய உள்ள இடைவெளி 2 செ.மீ. இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைப்பதால் ஆடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் 3 அடி பள்ளத்தில் விழுந்துவிடும். இதன்மூலம் ஆடுகள் நோய் பாதிப்பின்றி சுகாதாரமாக இருக்கவும் வழிவகுக்கும். இம்முறையில் கொட்டகையினை நன்முறையில் பராமரித்தால்

ஆடுகள் சுகாதாரமாகவும், அதிக எடையுடனும் காணப்படும். ஆடு இரண்டு வருடத்திற்கு மூன்று முறை குட்டி போடுகின்றன. 1 தடவை 2 குட்டிகள் போடும். அதன்படி 2 வருடத்திற்கு 6 குட்டிகள், 1 ஆண்டுக்கு 3 குட்டிகள்.

 

click me!