சணப்பூ, தக்கைப்பூண்டு வகை பசுந்தாள் உரங்களைவிட, கொழிஞ்சி ரகம் உரம் சிறப்பானது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும், அனைத்து மண் வகைக்கும் ஏற்றது.
எக்டேருக்கு 15 – 20 கிலோ விதை தேவைப்படும். களை நிர்வாகம், உரம் தேவையில்லை. நேரடியாக விதைக்கலாம், பூச்சிகள் அதிகம் தாக்காது.
வரட்சியை தாங்கி வளரக்கூடியது.30 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சலாம்.
65 முதல் 70 நாட்கள் வளர்ந்த பசுந்தாள் உரங்களை அப்படியே மடக்கி உழவு செய்ய வேண்டும்.
பத்து நாட்கள் கழித்த பின், விருப்பப்பட்ட பயிரின் விதைகளை நடலாம். மூன்று மூட்டை யூரியா தரும் சத்தை, பசுந்தாள் உரம் தருகின்றது.
மண்வளத்தை பாதுகாக்கின்றது. மண்ணில் குறைந்த நாட்களில் மட்கிவிடும்.மற்ற பசுந்தாள் உரங்கள் மட்க நீண்ட நாட்களாகும். ஒரு முறை விதைத்தால், மீண்டும் தானாக முளைத்து வரும்.