ஆண்டு முழுவதும் திராட்சை கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்க வேண்டுமா அப்போ இயற்கை விவசாயம் தான் சிறந்தது.
இயற்கை விவசாயத்தில் திராட்சை’
இரசாயன உரங்கள் பயன்படுத்த கூடாது என்ற தீர்மானத்துடன் களத்தில் இறங்கி திராட்சைக்கும் இயற்கை உரங்களையே பயன்படுத்தி நல்ல லாபத்தை பாருங்கள்.
“இரசாயன உரங்களைக் கொட்டி ஒரு தவணைக்கு 7 டன் திராட்சை அறுவடை செய்தீர்கள் என்றால் அதே அளவு நிலத்தில் எந்த இரசாயன உரமும் போடாமல் மூன்றரை டன் திராட்சை எடுக்கலாம்.
ரசாயனத்திற்கு அதிகமாய்ச் செலவு செய்து உற்பத்தி செய்யும் திராட்சையைக் கிலோ 17 ரூபாய்க்கு போகும்.
ஆனால், பெரிய அளவில் செலவில்லாமல், இயற்கை விவசாயத்தில் விளைவிக்கும் திராட்சை கிலோ 50 ரூபாய்க்குப் போகும்.
திராட்சையை சென்னையிலுள்ள ஆர்கானிக் கடைகளுக்கு அனுப்பலாம். திராட்சைக்கு நடுவில் வல்லாரையை ஊடு பயிராகப் போடலாம். அதை கிலோ 200 ரூபாய்க்கு எடுப்பர்.
திராட்சைக்கு ஒரு தடவை கவாத்து செய்தால், அடுத்த நாலாவது மாதத்தில் அறுவடை எடுக்கலாம். ஒட்டு மொத்தத் தோட்டத்தையும் ஒரே நேரத்தில் கவாத்து செய்தால், ஒரே நேரத்தில் மகசூல் கிடைத்துவிடும்.
இப்படி ஒரே நேரத்தில் மொத்தமாகத் திராட்சையை விளைவித்தால், அதை சந்தைப்படுத்துவது சிரமம். அதனால், தோட்டத்தில் எந்த நேரமும் திராட்சை இருப்பது போல் விளைவிக்கத் திட்டமிடலாம். அதன்படி கவாத்து முறைகளை மாற்றி, இப்போது தோட்டத்தில் மாதா மாதம் திராட்சை அறுவடை செய்யலாம்.
ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கும் திராட்சைகள் கேன்சர் போன்ற நோய்களை உண்டாக்கும். ஆனால், இயற்கை விவசாயத்தில் விளைவிக்கும் திராட்சைகள் கேன்சருக்கு மருந்தாகப் பயன்படுகிறது.