இயற்கை முறையில் பப்பாளி சாகுபடி
பப்பாளி சாகுபடியில் இறங்கி இலட்சங்களில் வருமனாத்தைப் பார்க்கலாம். பப்பாளி சாகுபடி செய்தால் தினமும் வருமானம் கிடைக்கும்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து, பறித்து வைத்திருக்கும் பழங்களை எடை போட்டு வாங்கி கொண்டு போய்விடுவர்.
இன்றைக்குத் தேதிக்கு கிலோ 10 ரூபாய் விலைக்கு போகும். சராசரியாக வருடத்திற்கு நான்கு இலட்ச ரூபாய்க்குக் குறையாமல் லாபம் கிடைக்கும்.
மகசூல் முடிந்ததும், மரங்களை வெட்டி. ரோட்டா வேட்டர் வைத்து உழுது, நிலத்திற்கே உரமாக்கலாம். ரெட் லேடி பப்பாளிப் பழத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், விற்பனைக்குப் பிரச்சனையே இல்லை.
பப்பாளிப் பழம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கலை சரி செய்வதற்கும், பெண்களுடைய மாதவிடாய் பிரச்னைக்கும், இது நல்ல பலன் கொடுக்கும்.
பப்பாளி உற்பத்தியாளர் சங்கம் இருக்கிறது. பப்பாளிக்கு அரசாங்கம் தனி வாரியம் அமைக்க வேண்டும் என்பது இந்த சங்கத்தின் வேண்டுகோள்.
நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ள ரகங்களை வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கித் தர வேண்டும்.
அரசு நாற்றுப் பண்ணைகளில் பப்பாளி நாற்றுகளை உற்பத்தி செய்து மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்பதும் இந்த சங்கத்தின் வேண்டுகோள்.
பப்பாளியை இயற்கை முறையில் சாகுபடி செய்வதில் எழும் சந்தேகங்களை வேளாண் பல்கலைக் கழக விஞ்ஞானிகளிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.