வாயு இயந்திர உற்பத்தியில் குறைபாடுகளும் அவற்றிற்கான தீர்வுகளும்
** சரியான முறையில் பராமரித்து வந்தால் சாண எரிவாயுக் கலன் பல ஆண்டுகளுக்கு பழுதுபடாது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சாண எரிவாயு கலனின் சொந்தக்காரர்களின் அனுபவம் இதுவே.
** செரிக்கும் பகுதி சுவரில் விரிசல் ஏற்படுதல், மற்றும் அடித்தளம் இறங்குதல் : சாண எரிவாயு கலத்தின் செரிக்கும் பகுதி விரிசல் ஏற்பட்டால் மற்றும் அடித்தளம் இறங்கினால் சுவரின் பின் பகுதியில் மணல் சரியாக நிரப்பப்படாமல் இருக்கலாம். இவ்வகையான பழுதை சரிசெய்ய சுவரின் பின்புறம் சரியாக மணலால் நிரப்பப்பட வேண்டும்.
** மத்தியில் உள்ள பிரிக்கும் சுவர் இடிதல் (இரும்பு வாயு கொள்கலம் உள்ளதில்) : சுவரின் இருபக்கமும் உள்ள சாணக் கரைசலின் சமமான அழுத்தம் இல்லாமல் இருந்தால் மத்தியில் உள்ள பிரிக்கும் சுவர் இடிந்து விடும். இதை சரிசெய்ய ஆரம்பத்தில் சாணக் கரைசலை பிரிக்கும் சுவருக்கு இருபக்கமும் சமமாக நிரப்பி வரவேண்டும்.
** வாயு ஒழுக்க:
இரும்பு வாயுக் கொள்கலன் சரியாக வெல்டு செய்யாமல் இருந்தாலும். வாயு சேகரிக்கும் கூடு சரியாக கட்டப்படாமல் இருந்தாலும் வாயு ஒழுக்கு ஏற்படும். இதை சரி பார்த்து பழுது பார்க்கவேண்டும்.
** வாயு குழாயில் தண்ணீர் தங்குதல்
தண்ணீர் நீக்குவது சரியாகப் பொருத்தாமல் இருந்தால் வாயுக் குழாயில் தண்ணீர் தங்கி விடும். இதை சரி செய்ய வாயுக் குழாய்களைப் பொருத்துதல் வேண்டும். 5. முதலில் சாணக் கரைசலை நிரப்பியபின் வாயு வராமை:சாணக்கரைசலை நிரப்பியபின் வாயு வர வாய்ப்பில்லை. கரைசலை ஊற்றி 2 அல்லது 3 வாரங்கள் வரை பொறுத்திருந்து பின்பு வாயுவை உபயோகிக்கலாம்.
** இரும்பு கொள்கலம் உயராமல் இருத்தல் மற்றும் உள்நுழையும் வெளிவரும் பகுதியில் சாணக்கரைசலின் மட்டம் உயராமல் இருத்தல் சாணக் கரைசல் போதுமான அளவு இல்லாமல் இருந்தாலும் கொள்கலத்திலும் குழாயிலும் வாயு ஒழுக்கு ஏற்பட்டாலும் கனமான அடை இருந்தாலும் மேற்கண்ட குறைகள் எற்படும்.
** இதை சரி செய்ய தேவையான கரைசலை நிரப்ப வேண்டும். பின்பு அதை சரிபார்க்க வேண்டும். கொள்கலத்தைச் சுற்றி மூங்கில் கொண்டு கரைசலைக் கலக்க வேண்டும்.