பெரியகுளம் பகுதியில் குப்பைக்கு போகும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக்கி, விவசாயிகள் மகசூலை அதிகரிக்கின்றனர்
விவசாயிகள் மண்ணை உழுது இயற்கை உரங்களான மாட்டுசாணம், புண்ணாக்கு கரைசல் ஆகியவற்றை போட்டு, சணம்பு உள்ளிட்ட கீரைச்செடிகளை பயிர் செய்கின்றனர்.
undefined
இத்துடன் இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி, அதிகளவு விளைச்சல் பெறுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “பூண்டின் அனைத்து பகுதிகளும் மக்களுக்கு பயன்படுகிறது. இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை சேகரித்து, நிலத்தில் கொட்டி உழுகும் போது, மண்ணில் தீங்கு விளைவிக்கும் வேர்புழுக்கள் சாகுகின்றன.
இதனால் மண்ணின் வளமும் அதிகரிக்கிறது. இதனால் வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் அமோகமாக இருக்கிறது”.