தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், தாவரங்கள் நட்டுப் பராமரிக்கப்படுவது பாராட்டுக்கு உரியது. ஆனால், மரங்களிலிருந்து தினசரி உதிரும் இலைச்சருகுகளைத் தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழலுக்குச் சீர்கேடாக இருப்பது மட்டுமில்லாமல், காசு கொடுக்காமல் கிடைக்கும் வளத்தை வீணடிக்கப்படுகிறது.
காடுகளில் உள்ள மரங்கள், குறைந்த மழைபொழிவுக் காலத்திலும்கூடப் பச்சைப் பசேலென இருப்பதற்கான காரணத்தைப் பற்றி யோசித்து இருக்கிறோமா? இதற்கு, அவை நுகரும் இயற்கை உரங்களே அடிப்படைக் காரணம். மரங்களிலிருந்து விழும் இலைகள், சருகுகள், இதர மரச் சிதைவுகள் மக்கிப் பலன் தரும் உரமாக மாறுகின்றன.
undefined
இதை நாமும் பின்பற்றலாம். வீடுகளிலும் பெரும் வளாகங்களிலும் உதிர்ந்த இலைகள், சருகுகளை ஓரிடத்தில் சேகரித்து இயற்கை உரமாக்கலாம். 2009 14 ஆண்டுகளுக்கு இடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்த நிலப்பரப்பில் 60.3 சதவீதத்தில் விவசாயம் செய்தாலும், விவசாய உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு 2,962 டன் என்ற அளவிலேயே உள்ளது.
ஆனால், தனது 12.6 சதவீத நிலப்பரப்பில் மட்டும் விவசாயம் செய்யும் ஜப்பானில் 6,105 டன் விவசாய உற்பத்தி கிடைக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் ரசாயன உரமோ, நவீனத் தொழில்நுட்பமோ அல்ல. இயற்கையான மட்கு உரங்களை அதிக அளவில் பயன்படுத்துவதே.