பயிர் வாங்கும் விவசாயிகளுக்கு ஓர் ஆலோசனை...

 |  First Published Dec 20, 2016, 12:42 PM IST



விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் பயிர்களுக்கு விதைகள் வாங்கும் போது விதைச் சட்டத்தின்படியும், சரியான முளைப்புத்திறன் மற்றும் சுத்தமான விதைகளாக உள்ளதா என்பதை அறிந்து வாங்க வேண்டும்.

விவசாயிகள் உற்பத்தி செய்ய விரும்பும் பயிர் மற்றும் ரகம் பற்றிய விவரங்களை முன்னதாகவே முடிவு செய்து அதன்படி விதைகள், பயிரிடப்படும் பருவத்திற்கு உகந்ததா என்பதை கொள்கலனில் பார்த்து விற்பனையாளரிடமும் உறுதி செய்து வாங்க வேண்டும்.

Latest Videos

undefined

மேலும், விற்பனைக்கு உள்படுத்தப்படும் விதைப் பைகளில் விவர அட்டை அல்லது விதைச்சான்றுத் துறையினரால் வழங்கப்பட்டு இருக்கும் சான்று அட்டை பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும். எந்தவித விவரமும் இல்லாமல் மூடைகள் மற்றும் பைகளில் விற்பனை செய்யப்படும் விதைகளை வாங்குவதால் விதைகளின் முளைப்புத்திறனை அறிய இயலாது.

சான்று பெற்ற விதைகளை, பிரிக்கப்படாத முழுப்பைகளாக வாங்குதல் மிகவும் நல்லது. ஏனெனில் அவற்றில் விவர அட்டை அல்லது சான்று அட்டைகளிலிருக்கும் முக்கிய விவரங்களான விதைப் பரிசோதனை நாள் மற்றும் காலக்கெடு தேதி ஆகியவை இடம் பெற்றிருப்பதை அறிவது எளிது.

இதுதவிர, காலக்கெடு முடிந்த விதைகளை வாங்குவதால் விவசாயிகள் முழு வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது. எனவே விவர அட்டையில் இடம்பெற்றுள்ள பயிரின் ரகம், மண்ணின் தன்மை மற்றும் ஏற்ற பருவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாங்குவது ஒவ்வொரு விவசாயின் பொறுப்பாகும்.

விதைப்பைகள் மீது விதைச்சான்றுத் துறையினரால் வழங்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய சின்னம் இருப்பினும், சான்று அட்டை இல்லாத பைகள் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை விவசாயிகள் அறிய வேண்டும். விதைப் பைகளில் இணைக்கப்பட்டு இருப்பது சான்று அட்டைதானா என்பதைக் கவனித்து வாங்குதல் அவசியமாகும்.

விற்பனையாளர்களிடம் விதை வாங்கியதற்குரிய ரசீதை கட்டாயம் கேட்டுப் பெற வேண்டும். மேலும் விதைகள் சம்பந்தமான புகார்களை விதைச்சான்று துணை இயக்குநரிடம் தெரிவிக்கலாம்.

 

click me!