நெல் வைக்கோல் காளான் வளர்ப்பு முறையில் காளான் வளர்த்தால் இரண்டு கிலோ வரை காளான் அறுவடை செய்யலாம்.
அ. படுக்கை தயாரிப்பு மற்றும் வளர்ப்பு
1.. குடிசை மற்றும் மர நிழலில் நெல் வைக்கோல் காளானை வளர்க்கலாம்.
2.. புதிய, நோயற்ற வைகோலை பயன்படுத்த வேண்டும்.
3.. ஒரு படுக்கை தயாரிப்பதற்கு 10-15 கிலோ வைக்கோல் தேவைப்படும்.
4.. சமீபத்திய காலகட்டத்தில், பாலித்தீன் குடிலில் வளர்ப்பதன் மூலம் 25-35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 75 - 80% ஒப்பு ஈரப்பதம் பராமரிக்கப்படுகிறது.
ஆ. நெல் வைக்கோல் கட்டு முறை
செயல்முறை:
1.. 1 மீட்டர் நீளம் மற்றும் 0.75 மீட்டர் அகலத்தில் மரக்கட்டைகளை கொண்டு பரண் அமைக்க வேண்டும்.
2.. ஒரு கிலோ எடை கொண்ட வைக்கோலை உருளையாக கட்ட வேண்டும்.
3.. வைக்கோல் கட்டுகளை 12-18 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
4.. கட்டுகளை வெளியே எடுத்து நீரை வடிக்க வேண்டும்
5.. வைக்கோல் கட்டுகளின் நுனிப்பகுதி ஒரு புரம் வருமாறு பரண்மேல் வரிசையாக அடுக்க வேண்டும்.
6.. இரண்டாம் வரிசையில் நுனிப்பகுதி முதல் வரிசையின் எதிர்புறம் வருமாறு அடுக்கவும்.
7.. காளான் வித்துகளை தூவிய பிறகு, மேற்கூறிய படி மூன்றாம் மற்றும் நான்காம் வரிசை அமைக்க வேண்டும்.
8.. இந்த வரிசைக்கு மேல் காளான் வித்துக்களை தூவ வேண்டும்.
9.. இதற்கு மேல் மீண்டும் இரண்டு வரிசை வைக்கோல் கட்டுகளை அடுக்க வேண்டும்.
10.. இவ்வாறு அடுக்கிய படுக்கைகளை பாலித்தீன் கொண்டு மூட வேண்டும்.
பின்குறிப்பு:
1.. வைக்கோல் கட்டுகளை நன்கு ஊற வைத்தால், படுக்கை போதிய ஈரப்பதம் கொண்டிருக்கும். இல்லையெனில், பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும்.
2.. அதிக ஈரப்பதம் காணப்பட்டால் பாலித்தீன் மூடாக்கினை சற்று நேரம் நீக்க வேண்டும்.
3.. படுக்கையின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அளவை கொண்டு காளான் வளர்ப்பின் மகசூல் இருக்கும்.
4.. காளான் மொட்டுகள் உருவாவதற்கு 30-35º செ மிதமான வெப்பநிலை தேவைப்படும்.
5.. வித்துக்கள் இட்ட 6-10 நாளில் காளான் மொட்டுக்கள் படுக்கையின் எல்லா பகுதியிலும் தோன்றும்.
6.. இதனை 4-5 நாட்களில் அறுவடை செய்யலாம். காளானை மொட்டுப் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். ஏனெனில் வெடித்த காளான்களில் அதிக அளவு நார் இருக்கும்.
மகசூல்:
10 கிலோ தளப்பொருளிலிருந்து 2 கிலோ வரை காளான் அறுவடை செய்யலாம்.