விதை மூலம் காளனை வளர்க்க இந்த முறையை பின்பற்றலாம்…

Asianet News Tamil  
Published : May 10, 2017, 12:24 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
விதை மூலம் காளனை வளர்க்க இந்த முறையை பின்பற்றலாம்…

சுருக்கம்

Follow this method to promote mushroom with seed ...

விதை மூலம் காளான் வளர்க்க உதவும் முறை

அ. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

** அறைக்குள் நுழையும் முன் கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவிவிட்டு செல்ல வேண்டும். முடிந்தால், கையுறைகளையும் பயன்படுத்தலாம்

** அறையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகபட்சமாக 2 ஆட்கள் வேலை செய்யலாம். அறையின் உள்ளே தேவையற்ற பேச்சுக்கள் பேசக் கூடாது

ஆ. செய்முறை

** நன்கு வளர்ந்த, நோயற்ற அதிகாலையில் மலர்ந்த சிப்பிக் காளானை தேர்ந்தெடுக்கவும். இதை ஒரு தூய தாளில் 2 – 3 மணி நேரத்திற்கு வைத்து, அதிலுள்ள ஈரத்தைப் போக்கவும்

** வளர்ச்சி ஊடக அறை / அடுக்குப் பாய்வு அறையை தொற்று நீக்கு கரைசலைக் கொண்டு சுத்தப்படுத்தவும்

** கிருமி நீக்கம் செய்த உருளைக்கிழங்கு டெக்ஸ்ரோஸ் ஸ்லேண்டஸ் ப்ளேடுகள், 8 இடுக்கிகள் மற்றும் பலவற்றை அடுக்குப்பாய்வு அறையில் வைத்து புறஊதாக்கதிர்களை செலுத்தலும்

** 20 நிமிடங்கள் கழித்து, புற ஊதாக் கதிர்களை நிறுத்தி, பின் 5 நிமிடங்கள் கழித்து திரும்ப தொடங்கவும்

** புன்சன் பர்னர் கொண்டு அனைத்து உபகரணங்களையும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்

** காளானை ஈத்தைல் ஆல்காலை பயன்படுத்தி மேற்பரப்பு கிருமி நீக்கம செய்ய வேண்டும். பின் காளானை நீளவாக்கில் இரண்டு பகுதிகளாக வெட்ட வேண்டும்

** புதிய, கிருமி நீக்கம் செய்த ப்ளேடு கொண்டு காளானின் மையப் பகுதியிலிருந்து வெட்டி சிறிய துண்டாக எடுக்க வேண்டும்

** அகார் கரைசலில் உள்ள குழாயின் பஞ்சை அகற்றி, காளானின் திசுவை கிருமிநீக்கம் செய்த இடுக்கியைப் பயன்படுத்தி இதில் வைத்து உடனடியாக மூடவேண்டும்

** காளானிலிருந்து திசுக்களை மாற்றிய பின்னர், இந்தக் குழாய்கள் ஒரு கூடையில் அடுக்கப்பட்டு, சுத்தமான அறையில் அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்

** குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதித்து, கலப்படமுள்ளவற்றை அகற்ற வேண்டும். அடுத்த 10 நாட்களுக்குள் இந்தக் குழாய்கள் தயார் நிலைக்கு வந்து விடும். பின் இந்த வளர்ச்சி ஊடகத்தைப் பயன்படுத்தி தாய்க் காளான் வித்துக்களை உற்பத்தி செய்யலாம்

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!