இரும்பு டிரம் மற்றும் ஃபைபர் டிரம் எரிவாயுக் கலன்
அமைப்பு
** சாண எரிவாயுக் கலனில் போதிய அளவில் ஒரு ஜீரணிப்பான் இருக்கிறது.
** மாட்டுச்சாணம், மூத்திரம், மலம் மற்றும் கால்நடை தீவனத்தில் மீதமுள்ளதையோ அல்லது காய்கறிகளை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டவற்றை அது நன்கு நொதிக்க வைக்கிறது.
** இந்த ஜீரணிப்பானுக்கு மேலே அதை மூடிக்கொண்டு வாயு பீப்பாய் இருக்கிறது. நொதிக்க வைத்தல் மூலம் வரும் வாயு இதில் சேருகிறது. சரியான அழுத்தத்தில் ‘வாயு குழாயில்’ இது வாயுவை செலுத்துகிறது.
** வாயு உபயோகமாகும் இடங்களுக்கு அதாவது சமையல் ஸ்டவ்கள், கோபர் காஸ் விளக்குகள், காஸ் என்ஜின்கள் ஆகியவைகளுக்கு பிரஷ்ஷர் குறையாமல் வாயு குழாய் மூலம் செலுத்துகிறது.
** கோபர் கேஸ் ஸ்டவ்கள், கோபர் காஸ் விளக்குகள், இன்ஜின்கள் ஆகியவைகளுக்கு வேண்டிய விசேஷ வடிவமைப்பில் காஸ் சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
சாண எரிவாயு கலனை இயக்குவது எப்படி
** ஜீரணிப்பான் என்று கூறப்படும் நொதிக்கலவைக்கும் தொட்டி, செங்கல், சிமெண்ட், கலவை ஆகியவைகளால் கட்டப்படுகிறது அல்லது கட்டிடம் கட்டுவதற்குக் கிடைக்கும் மற்ற உபயோகமான பொருள்களால் கட்டப்படுகிறது.
** லேசான எஃகுத் தகடுகள் அல்லது ஃபைபர்களாஸ் முதலியவற்றைக் கொண்டு வாயு பீப்பாய் செய்யப்படுகிறது. ஃபைபர் கிளாஸ் அழுத்தப் பாலியஸ்டரால் செய்யப்பட்ட வாயு பீப்பாய்களுக்கு முதலில் அதிகமாகச் செலவாகும்.
** ஆனாலும் பின்னால் அவைகளுக்கு வர்ணம் பூசவேண்டிய அவசியம் இருக்காது. அவைகளில் துருப்பிடிக்கவும் செய்யாது.
** காஸைக் கொண்டு செல்வதற்கான குழாய்கள் இரும்பினாலோ அல்லது கருப்பு பாலித்தீனாலோ செய்யப்பட்டிருக்க வேண்டும். அதனுடைய உள்விட்டம் 1 அங்குலம் அல்லது 32 மில்லி மீட்டருக்குக் குறையக் கூடாது.
** தகட்டின் கனம் 4.7 மில்லி மீட்டருக்கு குறையக்கூடாது. பாலித்தீன் பைப்புகள் மலிவானவை, பொருத்துவதும் எளிது. வீட்டுக்குள் 3/4 அங்குலம் அல்லது 1/2 அங்குலம் ஜி.ஐ பைப்புகள் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
** கதர் கிராமத் தொழில் கமிஷன் அங்கீகாரம் பெற்ற அடுப்புகள் அல்லது விளக்குகள் தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அவைகளின் திறன் ஏற்கனவே சோதிக்கப்பட்டு நிரூபணமானதாகும்.
** சாணத்தையும் கால்நடைகளின் மூத்திரத்தையும் சேகரித்து கலவை தொட்டியில் அவைகளை நிரப்பி, தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி உள்குழாய் வழியாக உள்ளே செலுத்துவது. இவ்வாறு இயந்திரத்திற்குள் போகும் கலவைக்குச் சமமான அளவு சாண கரைசல் வெளியே வரும். அது பக்குவமாகி பலன் தரக்கூடியதாக இருக்கும்.
** அந்தக் கலவையை உரக்குழியில் உடனே விட்டு, பண்ணைக் கழிவுகள் அல்லது வீட்டுக் குப்பைகளை அடுக்கடுக்காகப் போட்டு மூடிக்கொண்டு வரவேண்டும்.