1.. அரசு அங்கீகரித்துள்ள சாண எரிவாயுக் கலன்களின் வடிவமைப்புகள்
தற்பொழுது மத்திய அரசு கீழ்க்கண்ட, நான்கு விதமான சாண எரிவாயு சாதனங்களை, மான்யம் பெறுவதற்கு அங்கீகரித்துள்ளது.
1.. கிராமத் தொழில் ஆணைக்குழு இரும்பு டிரம் எரிவாயு கலன்
2.. கதர் கிராம ஆணைக்குழு ஃபைபர் டிரம் எரிவாயு கலன்
3.. கான்கிரீட் சுவர் டிரம் கலன் (பெரோ சிமெண்ட் வடிவம்)
4.. பந்து வடிவ நிலையான கூடார கலன் (தீன பந்து வடிவம்)
இவைகள் அமைக்க கிராமத்தில் ஏற்கனவே பயிற்சி பெற்ற கொத்தனார்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்தவித எரிவாயு கலனில் கட்டிடத்தை எளிதில் கட்டி முடித்து விடலாம். தரமான டிரம்மை கிராம அளவில் பரிசோதித்து வாங்கவேண்டும்.
2.. ஒரு மாட்டிலிருந்து எவ்வளவு சாணம் கிடைக்கிறது?
இதைப்பற்றி திட்டவட்டமான கணக்குக் கொடுக்கமுடியாது. மாடு பெரியதா, சிறியதா, அது உண்ணும் தீனி, அது தொழுவத்தில் கட்டப்படுகிறதா அல்லது மேய்ச்சல் நிலத்திற்குப் போகிறதா என்பதையெல்லாம் பொறுத்தது அது.
ஆனாலும், தொழுவத்தில் உள்ள குறிப்பிட்ட வயது வந்துள்ள நடுத்தர மாடுகளின் விஷயத்தில் கீழ்க்கண்ட கணக்கைச் சராசரியாக வைத்துக் கொள்ளலாம்.
1.. எருமை = ஒரு நாளைக்கு சுமார் 15 கிலோ
2.. காளை அல்லது பசு = சுமார் 10 கிலோ
3.. கன்றுகள் = சுமார் 5 கிலோ
ஒரு கிலோ பசுஞ் சாணத்திலிருந்து உற்பத்தியாகும் (காஸ்) வாயு 1.3 கன அடி.
3.. சாண எரிவாயு சாதனத்தின் அளவு என்ன?
எத்தனை மாடுகள் அல்லது ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் எந்த இடத்திலும் ஒரு சாண எரிவாயு சாதனத்தின் அளவைத் தீர்மானிக்க முடியும். மிகச் சிறிய சாண எரிவாயுக் கலனின் அளவு 2 கன மீட்டர். இதற்கு 2-3 மாடுகள் வேண்டும்.