சாண எரிவாயு ஏன் வேண்டும்? எதற்காக வேண்டும்? வாசிங்க தெரியும்...
** கிராமங்களில் சாணத்தை எருவாட்டி ஆக்கி எரிபொருளாகப் பயன்படுத்துவர் அல்லது அப்படியே உரமாகப் பயன்படுத்துவர். இந்த இரண்டு உபயோகங்களையும் ஒன்றாக நமக்கு சாண எரிவாயுக்கலன் மூலம் மட்டுமே கிடைக்கிறது
** சாண எரிவாயுக் கலனுக்குள் சாணத்தை செலுத்துவதன் மூலம் ”மீதேன்" என்ற எரிவாயு கிடைக்கிறது. அது நமக்கு பெட்ரோலியம் வாயுவைப்போன்று சமையலுக்குப் பயன்படுகிறது
** சாண எரிவாயுக் கலனிலிருந்து எரிவாயு தயாரித்த பின் வெளிவந்த மீத கழிவான சாணம் நல்ல சத்துள்ள உரமாகப் பயன்படுகிறது
பயன்கள்
** இவ்வாறு மாட்டுச் சாணத்தை மட்டுமல்ல, அதன் மூத்திரத்தையும், மனிதர்களின் மலத்தையும் கூட சாண எரிவாயுக்கலன் மூலம் எரிபொருளாகவும் இயற்கை உரமாகவும் மாற்ற முடியும்.
** இவை அந்த கலனுக்குள் சென்றபின் உற்பத்தியாகும் உரம் சத்து நிறைந்ததாக உள்ளது.
** தொற்று நோயை உண்டாக்கக்கூடிய ஈக்களோ, கொசுக்காளோ மற்றவைகளோ உற்பத்தியாகாது.
** வெளியே வரும் வாயு பிரகாசம் இல்லாமல், ஆனால் வெப்பம் தரும் நீலநிற ஜ்வாலை கொழுந்து விட்டு எரிகிறது. கிட்டத்தட்ட பாதி நேரத்தில் சமையல் முடிந்து விடுகிறது.
** மற்ற எரிபொருள்களில் இருப்பதைப் போல “மீத்தேன்” வாயுவில் புகை இல்லை. சூடாக்கும் பாத்திரங்கள் தொடர்ந்து பளபளப்புடன் இருக்கும்.