தேங்காய் நார் தொழிலில் மூலதனம்
முதல் வருட செயல்பாட்டு மூலதனமாக 1.50 லட்ச ரூபாய் தேவைப்படும். இது 15 நாட்களுக்கான மூலப் பொருட்கள், ஏழு நாட்களுக்கான முடிக்கப்பட்ட ஸ்டாக்குகள் மற்றும் 15 நாட்கள் விற்ற சரக்குக் கான வரவேண்டிய தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய தொகையாகும்.
செலவுகள்
எவ்வளவுதான் பட்ஜெட் போட்டு செலவு செய்தாலும் துண்டு விழவே செய்யும். அதுபோல இந்த பிஸினஸில் திடீர் செலவுகளும் வரும். கட்டட வேலைகள், இயந்திரங்கள், மின்சாரம், அலுவலக உபகரணங்கள் மற்றும் ஃபர்னிச்சர் போன்ற விதங்களில் 5 சதவிகிதம் அதாவது சுமார் 35 ஆயிரம் ரூபாய் வரை ஏற்படக்கூடும்.
ஆரம்ப கட்ட செலவுகள்
மின் இணைப்பிற்கான டெபாசிட் தொகை, போக்கு வரத்து, கடன் வாங்குவதற்கு என ஆகும் செலவுகள் போன்ற வகையில் ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகும்.
பிரேக் ஈவன்
மொத்த உற்பத்தி திறனில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது வருடங்களில் முறையே 38%, 36% 34% என இருந்தால் இத்தொழிலில் பிரேக் ஈவன் ஏற்படும். அதற்கான உற்பத்தித்திறன் 36 டன், 35 டன் மற்றும் 34 டன் என்று இருக்க வேண்டும்.
ரிஸ்க்
இத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருளான தேங்காய் மட்டை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படலாம். அப்போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வரும். அதனால் நம் லாபம் குறையலாம். போட்டி அதிகரித்து வருவதால், பொருட்களின் விலை குறையவும் வாய்ப்புண்டு.
மார்க்கெட்டிங்!
நாம் தயார் செய்யும் தேங்காய் நார் கயிறை கேரளாவில் இருக்கும் தேங்காய் நார் பொருட்கள் தயாரிப்பு யூனிட்களுக்கு விற்பனை செய்யலாம். தவிர, தமிழ்நாட்டில் சேலம், பொள்ளாச்சி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் தேங்காய் நார் கயிறுகளை வாங்க நிறைய வியாபாரிகள் இருக்கின்றனர்.
ஏற்றுமதியிலும் கலக்கலாம்!
மண் அரிப்பைத் தடுக்கும் வலைகள் மற்றும் பழத் தோட்டங்களில் கொடிகள் படர்வதற்கும் பயன்படுகிறது. இந்த தயாரிப்புகள் அனைத்தும் ஏற்றுமதி சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. உலகளவில் 3,80,000 டன்கள் ஜியோ- டெக்ஸ்டைலுக்கான சந்தை இருக்கிறது.
ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தயாரிப்பில் 97% சிந்தெடிக் மெட்டீரியல் மூலம் தயாரித்த பொருட்களுக்கு பதில் தேங்காய் நார் மூலம் தயாரிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் உலகளவில் இந்த பொருளுக்கான தேவை கணிசமாக அதிகரித்திருக்கிறது.
பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இந்தத் தொழில் கிடையாது என்பதோடு அங்கு ஆரம்பித்தால் அதிக செலவு ஏற்படும் என்பது நமக்கிருக்கும் கூடுதல் பலம். எதிர்காலத்தில் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா நாடுகளில் இந்தத் தொழில் தொடங்கப்பட்டாலும் நமக்கு அதிகம் பாதிப்பிருக்காது.
நிகர லாபம்
மொத்த விற்பனையில் 20-25% வரை லாபம் கிடைக்கும்.