தேங்காய் நார் கயிறு தொழில் - தயாரிப்பு முறை முதல் மூலப்பொருட்கள் வரை விரிவான பார்வை...

 
Published : Jan 02, 2018, 01:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
தேங்காய் நார் கயிறு தொழில் - தயாரிப்பு முறை முதல் மூலப்பொருட்கள் வரை விரிவான பார்வை...

சுருக்கம்

Coconut Fiber Rope Industry - Product Method The first view up to the first raw materials ...

தேங்காய் நார் கயிறு தொழில் 

தயாரிக்கும்  முறை

காட்டன் நூல் தயாரிப்பு போன்றே தேங்காய் நார் கயிறுகளும் தயார் செய்யப் படுகிறது. முதலில் தேங்காய் மட்டைகளை தண்ணீர்விட்டு ஊறவைத்து. இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து  ‘வில்லோயிங்’ எனப்படும் மரத்தினாலான இயந்திரத்தில் இட்டால் கழிவுகள் அகன்று நார் கிடைக்கும். அதன் பிறகு அந்த நாரை ‘சில்வரிங்’  மற்றும் ஸ்பின்னிங் இயந்திரத்தில் கொடுத்து கயிறாகத் திரித்தால், விற்பனைக்கு ரெடி!

இயந்திரம்

வில்லோயிங், சில்வரிங், ஸ்பின்னிங் மற்றும் உலர வைக்கும் இயந்திரம் போன்றவை தேவைப்படும். இந்தத் தொழிலுக்குத் தேவையான அனைத்து இயந்திரங்களும் தமிழகத்திலேயே, குறிப்பாக பட்டுக்கோட்டையிலேயே கிடைக்கிறது.

மின்சாரம்
இந்த தொழிலுக்கு 6.50 ஹெச்.பி(hp) மின்சாரம் தேவைப்படும். தேங்காய் நார் கயிறு தயாரிப்பு குடிசைத் தொழிலின் கீழ் வருவதால் மின்சாரத்தை அரசு சலுகைக் கட்டணத்தில் வழங்குகிறது.

வேலையாட்கள்

ஒரு ஷிப்ட் வேலை பார்க்க ஒன்பது திறமையான தொழிலாளர்கள் தேவை. இரண்டு ஷிப்ட் என்று வரும்போது 18 வேலையாட்கள் தேவை. மேலும் உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகளுக்கு ஒரு சூப்பர்வைசர் தேவை. 

இதில் 90 சதவிகித வேலைகள் பெண் தொழிலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயக் கூலித் தொழிலா ளர்களை இந்தத் தொழிலில் பயன்படுத்திக் கொள்ளலாம். 

இயந்திரங்களை எப்படி இயக்குவது என்பதை இயந்திரங் களை சப்ளை செய்யும்      நிறுவனமே தொழிலாளர்களுக்கு ஒரு வார காலத்தில் கற்றுத் தந்துவிடும்.

தண்ணீர்

தினமும் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதற்கான தண்ணீரை ஆழ்குழாய் கிணற்றின் மூலம் எடுத்துக் கொள்வது நல்லது. எனவே, நல்ல தண்ணீர் வசதி இருக்கும் இடமாகப் பார்த்து யூனிட்டை தொடங்குவது அவசியம். 

இந்தத் தொழில் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் தயாரித்த பொருளை எவ்வித பிரச்னையும் இல்லாமல் சப்ளை செய்யலாம்.

மூலப்பொருட்கள்
தேங்காய் நார்தான் இதன் முக்கிய மூலப்பொருள். மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கோவை  மாவட்டங்களில் தென்னை மரங்கள் அதிகளவில் இருப்பதால் அங்கிருந்து தேங்காய் மட்டையை வாங்கிக் கொள்ளலாம். 

தமிழகத்தில் மட்டும் 1.30 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டை ஓர் ஆண்டுக்கு கிடைக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் 1.90 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே மூலப்பொருள் கிடைப் பதில் தட்டுப்பாடு இருக்காது.

புதிதாக யூனிட் வைக்க நினைப்பவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு சுமார் 130 டன் தேங்காய் மட்டை வரை தேவைப்படும்.

PREV
click me!

Recommended Stories

Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!