வீட்டுத் தோட்டத்தை இப்படி அமைப்பதால் எவ்வளவு பிளஸ் இருக்கு தெரியுமா? 

 |  First Published Jun 19, 2018, 1:27 PM IST
Do you know how much you have to build a home garden?



வீட்டுத் தோட்டத்தை இப்படியும் அமைக்கலாம்...

** வளர்க்கப்போகும் செடியின் அளவுக்குத் தகுந்த தொட்டிகளையோ, பைகளையோ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். 

Tap to resize

Latest Videos

undefined

** அவற்றில், தென்னை நார்க்கழிவு, மணல், வண்டல் மண், செம்மண், தொழுவுரம், ஆட்டு எரு, மண்புழு உரம் ஆகியவற்றை சம அளவில் கலந்து தேவையான விதைகளை நடவு செய்ய வேண்டும். 

** ஒவ்வொரு தொட்டியிலும் அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் ஆகிய உயிர் உரங்களில் தலா 100 கிராம் இட வேண்டும்.

** நடவு செய்த செடிகளில் பிஞ்சுப்பருவம் வரும்போது, ஒவ்வொரு தொட்டியிலும் 50 கிராம் வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். 

** அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

** செடிகள் வாடும்போது பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். பூச்சிகள் தென்பட்டால் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 

** பூ பிடிக்கும் பருவம், பிஞ்சுப் பருவத்தில் மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசலைத் தெளிக்க வேண்டும். 

** அனைத்துக் கரைசல்களையும் ஒரு லிட்டருக்கு 30 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

click me!