1. பூச்சி விரட்டி - வசம்பு
வசம்பு ஒரு கிருமி நாசினி என்பதுடன் சிறந்த பூச்சிவிரட்டி. உங்க வீட்டில் கொசு அதிகம் இருக்கும் இடத்தில் வசம்பு மற்றும் வேப்பப்புண்ணாக்கினை சேர்த்து எரித்தால் கொசுக்கள் உள்பட சிறிய சிறிய பூச்சிகள் அந்த பக்கம் வரவே வராது.
சாக்கடை அதிகம் உள்ள இடங்களில் மாலை நேரத்தில் வசம்பினையும், வேப்பபுண்ணாக்கினையும் வைத்து புகைப்போட்டால் நிச்சயம் சிறிய சிறிய பூச்சிகள் அண்டாது.
நீங்கள் இதை நீங்களும் முயற்சித்துப்பார்க்கலாம் முயற்சித்து பார்த்துவிட்டு எங்களுக்கும் தெரியப்படுத்தலாம்
2.. பயிர் வளர்ச்சி ஊக்கி - தேமோர்க் கரைசல்
தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும் இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும்.
ஒரு லிட்டர் புளித்த மோர், ஒரு லிட்டர் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைத்து, தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும்.
ஏழு நாட்கள் இவ்வாறு செய்தால், தேமோர்க் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள் ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.