பசுந்தாள் உரமிடுதல்:
இது தமிழ்நாட்டில் ஆயிரக்கனக்கான ஆண்டுகளாக நம் விவசாயிகளிடம் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவரும் நடைமுறை ஆகும். இந்த முறையில் பசுந்தாள் பயிர்கள் நிலத்தில் வளர்க்கப்பட்டு பூ பூக்கும் தருணத்தில் அந்நிலத்திலேயே மண்ணோடு சேர்த்து உழப்படுகிறது. இவ்வுரமிடுதலால் பயிர்களில் நைட்ரஜனை நிலை நிறுத்த பயன்படுகிறது.
undefined
பசுந்தாள் உரமிடுதலின் நன்மைகள்:
1.பசுந்தாள் பயிர்களானது மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் பண்புடையது.இதனால் அடுத்த பயிருக்கான உரத்தேவை 40-60% வரை குறைகிறது.
2. மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளை உயர்த்துகிறது.
3.காரத்தன்மை உடைய நிலத்தை நடுநிலைப்படுத்த பயன்படுகிறது.
4.மண்ணில் பொதுபொதுப்புதன்மை மற்றும் காட்றோட்டத்தை அதிகப்படுத்துகிறது.
5.பூச்சித்தொல்லைகளைக் குறைக்கிறது.(வேம்பு,புங்கம் முதலியன)
6.மண் அரிப்பை தடுக்கிறது.