தென்னை நார்க் கழிவுகளை  உரமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறலாம். எப்படி? 

 
Published : Jun 18, 2018, 04:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
தென்னை நார்க் கழிவுகளை  உரமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறலாம். எப்படி? 

சுருக்கம்

Coconut yarn waste can be obtained using high yield. How?

தென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல் பெறலாம்.

தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது தென்னங்கூந்தல். இதிலிருந்து நார் பிரித்தெடுக்கப்படுகிறது. பிரித்தெடுக்கும் போது, நார் கழிவுகள் கிடைக்கின்றன.இவைகள் தென்னை நார்க் கழிவுகள் என்றழைக்கப்படுகின்றனர்.

நம் இந்திய தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து, 7.5 மில்லியன் டன் அளவிலான நார்கழிவுகள் என்றழைக்கப்படுகின்றன. நம் இந்திய தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து, 7.5 மில்லியன் டன் அளவிலான நார்க்கழிவுகள் ஆண்டுதோறும் கிடைக்கப்பெறுகிறது. 

தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5 லட்சம் டன் நார்க்கழிவுகள் கிடைக்கிறது. இதிலுள்ள மூலப்பொருள்களால், இது தோட்டக்கலையில் வளர்தளமாக பயன்படுகிறது.

தென்னை நார்க்கழிவு உரம் தயார் செய்தல்

பண்ணை கழிவான தென்னை நார்கழிவு கொண்டு ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரித்தல்.

தேவையான பொருட்கள்:

1000 கிலோ தென்னை நார்க்கழிவு, 5 கிலோ யூரியா, 5 பாட்டில் புளூரோட்டஸ், காளான் விதை, தண்ணீர்.

செய்முறை:

நிழல் தரக்கூடிய சமப்படுத்தப்பட்ட தரைப்பகுதியில் 5*3 மீ அளவுடைய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். முதலில் 100 கிலோ நார்க்கழிவை முதல் படுக்கையாக பரப்ப வேண்டும். பிறகு 1 பாட்டில் பூஞ்சாண விதைகளை முதல் படுக்கையின் மேல் சீராக தூவவேண்டும். 

அதன்மேல் 100 கிலோ நார்க்கழிவை இரண்டாவது படுக்கையாக பரப்ப வேண்டும். 1 கிலோ யூரியாவை இதன் மேல் சமமாக தூவவேண்டும். இவ்வாறாக பூஞ்சாண விதை மற்றும் யூரியாவை அடுத்தடுத்து 100 கிலோ நார்க்கழிவுடன் சேர்த்து அடுக்க வேண்டும். 

இதனுடன் தண்ணீரைச் சேர்த்து ஈரப்பதம் 50-60 சதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். இதன் உயரம் 1மீ வரை இருக்க வேண்டும். இரண்டு மாதங்களில் கம்போஸ்ட் தயாராகிவிடும். ஈரம் 50 சதத்திற்கும் குறையும் பொழுது தண்ணீர் தெளிக்க வேண்டும். முடிவில் தென்னை நார்க்கழிவு முழுவதும் மக்கி கருப்பு நிற தொழு உரமாக மாறிவிடும்.

தென்னை நார் கழிவு எளிதில் மக்காத பொருட்களான லிக்னின் 30 சதம் மற்றும் செல்லுலோஸ் 20 சதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவற்றை மக்கக்கூடியதாக மாற்ற பூஞ்சாண விதை மற்றும் யூரியா தேவைப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

Business: மாதத்திற்கு ரூ.50,000 வருமானம் ஈட்டலாம் ஈசியா! லாபத்தை அள்ளித்தரும் கீரை சாகுபடி.!
Egg Price: இனி ஆம்லேட், ஆஃபாயிலை மறந்துட வேண்டியதுதான்.! கோழி முட்டை விலை புதிய உச்சம்.!